சினிமா செய்திகள்

திரைக்கு வருவதற்கு முன்பே‘அவெஞ்சர்ஸ்’ படம் இணையதளத்தில் வெளியானது + "||" + Avengers movie was released on the website

திரைக்கு வருவதற்கு முன்பே‘அவெஞ்சர்ஸ்’ படம் இணையதளத்தில் வெளியானது

திரைக்கு வருவதற்கு முன்பே‘அவெஞ்சர்ஸ்’ படம் இணையதளத்தில் வெளியானது
அவெஞ்சர்ஸ் படம் இன்று திரைக்கு வரும் நிலையில், இணையதளத்தில் ஒரு நாள் முன்னதாகவே வெளியாகிவிட்டது.
சூப்பர் ஹீரோக்களை ஒருங்கிணைத்து வெளிவரும் அவெஞ்சர்ஸ் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை வந்த அனைத்து அவெஞ்சர்ஸ் படங்களுமே வசூல் சாதனைகள் நிகழ்த்தி உள்ளன. இந்த வரிசையில் ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் திரைக்கு வருகிறது.

இதில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிரிஷ் ஹேம்ஸ்வொர்த், மார்க் ரூபலோ, கிறிஸ் எவான்ஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ இயக்கி உள்ளனர். இந்த படம் முந்தைய படங்களின் வசூலை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.

இந்த படத்தின் தமிழ் பதிப்புக்கான வசனத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி உள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒரு பாடலை உருவாக்கி உள்ளார். இந்த பாடல் ஏப்ரல் 1-ந் தேதி வெளியானது. நடிகர் விஜய் சேதுபதி அயன்மேனுக்கும், ஆண்ட்ரியா பிளாக் விடோ கதாபாத்திரத்துக்கும் தமிழில் டப்பிங் பேசி உள்ளனர்.

உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் இன்று திரைக்கு வரும் நிலையில் இதன் தமிழ் பதிப்பு இணையதளத்தில் ஒரு நாள் முன்னதாகவே வெளியாகிவிட்டது. இது ஹாலிவுட் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வழக்கமாக புதிதாக திரைக்கு வரும் தமிழ் படங்களை முதல் நாளிலேயே இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டு வந்தனர். இப்போது ஹாலிவுட் படத்தின் தமிழ் பதிப்பையும் இணையதளத்தில் வெளியிட்டு ஹாலிவுட் பட உலகை அதிர வைத்துள்ளனர். ஆனாலும் இது 3டி படம் என்பதால் தியேட்டர்களுக்கு சென்று பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.