சினிமா செய்திகள்

மஞ்சிமா மோகனை பாராட்டிய கவுதம் கார்த்திக் + "||" + Gautham Karthik hailed manjima mohan

மஞ்சிமா மோகனை பாராட்டிய கவுதம் கார்த்திக்

மஞ்சிமா மோகனை பாராட்டிய கவுதம் கார்த்திக்
தேவராட்டம் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை மஞ்சிமா மோகனை நடிகர் கவுதம் கார்த்திக் பாராட்டினார்.
முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக்- மஞ்சிமா மோகன் ஜோடியாக நடித்துள்ள படம் தேவராட்டம். ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது கவுதம் கார்த்திக் கூறியதாவது:-

“தேவராட்டம் சிறந்த படமாக தயாராகி உள்ளது. இந்த படம் என்னை காப்பாற்றும் என்று நம்புகிறேன். மதுரை மக்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், பாஷைகளை இயக்குனர் சொல்லித்தந்து என்னை நடிக்கவைத்தார். சத்தியமாக மதுரை மக்களின் பாசம் போல யாரும் வைக்க முடியாது. பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது.

படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மஞ்சிமா மோகன் எனக்கு நிறைய உதவிகள் செய்து இருக்கிறார். படப்பிடிப்புக்கும் தாமதம் இல்லாமல் சரியான நேரத்துக்கு வந்து விடுவார். மதுரையை ஒளிப்பதிவாளர் படத்தில் அழகாக காட்டி இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மஞ்சிமா மோகன் கூறும்போது, “தேவராட்டம் எனக்கு முக்கிய படம். கவுதம் கார்த்திக் துறுதுறுவென நடித்து இருக்கிறார்.” என்றார்.

டைரக்டர் முத்தையா பேசும்போது “தேவராட்டம் சாதி ரீதியிலான படம் கிடையாது. குடும்ப உறவுகள் பற்றிய படம். ஏன் உனது படங்களில் அரிவாள் இருக்கிறது என்கிறார்கள். பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வெட்ட வேண்டும் என்கிறார்கள். நிஜத்தில் அப்படி செய்ய முடியாது. அதனால்தான் அதை படத்தில் வைக்கிறோம். உறவுகளை பற்றித்தான் படம் எடுப்பேன்” என்றார்.