சினிமா செய்திகள்

இந்தியில் விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் + "||" + Vijay Sethupathi's super deluxe film in Hindi

இந்தியில் விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படம்

இந்தியில் விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படம்
விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடக்கிறது.
விஜய் சேதுபதி, சமந்தா, பஹத் பாசில், மிஸ்கின், பகவதி பெருமாள் ஆகியோர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே 2011-ல் வெளியாகி விருது பெற்ற ஆரண்ய காண்டம் படத்தை டைரக்டு செய்தார்.

சூப்பர் டீலக்ஸ் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இதில் இமேஜ் பார்க்காமல் விஜய் சேதுபதி நடித்து இருந்த திருநங்கை வேடம் பேசப்பட்டது. கவர்ச்சி காட்சிகள் அதிகம் இருந்ததாக விமர்சனங்களும் கிளம்பின. இந்த படத்தை பிரபல இந்தி இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், விக்ரமாதித்யா மோட்வானி உள்பட பலர் பார்த்து பாராட்டி இருக்கிறார்கள்.

தற்போது சூப்பர் டீலக்ஸ் படத்தை பிரபல நடிகர், நடிகைகளை வைத்து இந்தியில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. பிரபல இந்தி பட நிறுவனம் டைரக்டர் தியாகராஜன் குமாரராஜனை அணுகி படத்தை இந்தியில் ரீமேக் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.