சினிமா செய்திகள்

திருமணமான 4-வது நாளில் விவாகரத்து கேட்ட நடிகர் + "||" + 4th day of marriage Actor asked for divorce

திருமணமான 4-வது நாளில் விவாகரத்து கேட்ட நடிகர்

திருமணமான 4-வது நாளில் விவாகரத்து கேட்ட நடிகர்
ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ்-எரிகா கோய்கே திருமணம் நான்கு நாட்களில் முறிந்துவிட்டது.
பிரபல ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ். இவர் நடித்த கான் ஏர், பேஸ் ஆப், கோஸ்ட் ரைடர், ஹான் இன் 60 செகன்ட்ஸ், ஸ்னேக் ஐஸ் உள்ளிட்ட பல படங்கள் வசூல் குவித்தன. உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். நிக்கோலஸ் கேஜுக்கு தற்போது 55 வயது ஆகிறது. இவருக்கும், மேக்கப் கலைஞர் எரிகா கோய்கேவுக்கும் ஒரு ஆண்டுக்கு முன்பு காதல் மலர்ந்தது.

கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இது கேஜுக்கு 4-வது திருமணம் ஆகும். இந்த திருமணம் நான்கு நாட்களில் முறிந்துவிட்டது. விவாகரத்து கேட்டு நிக்கோலஸ் கேஜ் கோர்ட்டுக்கு சென்றுள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “திருமணத்துக்கு முன்பு நானும், கோய்கேவும் அளவுக்கு அதிகமாக மது அருந்தினோம். போதையில் இருந்தபோது நாம் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கோய்கே கூறினார். நானும் போதையில் எதுவும் புரியாமல் திருமணத்துக்கு சம்மதம் சொல்லிவிட்டேன். எனவே திருமணத்தை ரத்து செய்து எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

திருமணம் முடிந்ததும் அமெரிக்காவில் லாஸ் வேகாஸில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அங்கு இருவருக்கும் கடுமையான சண்டை நடந்துள்ளது. இந்த தகராறை ஓட்டல் ஊழியர்களும் அங்கு தங்கி இருந்தவர்களும் பார்த்துள்ளனர். திருமணமான 4-வது நாளில் நிக்கோலஸ் கேஜ் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு சென்றது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.