சினிமா செய்திகள்

சம்பளத்தை ரூ.3 கோடியாக உயர்த்திய சமந்தா + "||" + Samantha raised the salary to Rs 3 crores

சம்பளத்தை ரூ.3 கோடியாக உயர்த்திய சமந்தா

சம்பளத்தை ரூ.3 கோடியாக உயர்த்திய சமந்தா
நடிகை சமந்தா தனது சம்பளத்தை ரூ.3 கோடியாக உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.
சமந்தா 2010-ல் பாணா காத்தாடி படத்தில் கதாநாயகியாகி தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தார். விஜய், விக்ரம், தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். கடந்த வருடம் திரைக்கு வந்த யுடர்ன், இரும்புத்திரை படங்கள் நல்ல வசூல் பார்த்தன.

சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார். திருமணத்துக்கு பிறகும் மார்க்கெட் குறையவில்லை. தமிழ், தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்புகள் வருகின்றன. கணவர் நாக சைதன்யாவுடன் நடித்த ‘மஜிலி’ தெலுங்கு படம் 2 வாரத்துக்கு முன்பு திரைக்கு வந்து நல்ல லாபம் பார்த்துள்ளது.

பொதுவாக திருமணத்துக்கு பிறகு நடிகைகளுக்கு அக்காள், அண்ணி வேடங்கள்தான் வரும். ஆனால் சமந்தாவை தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க அழைக்கின்றனர். கவர்ச்சி வேடங்களிலும் தாராளமாக நடிக்கிறார். தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்து வெற்றி பெற்ற 96 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். இந்த படத்தில் திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். மன்மதடு-2 என்ற படத்தில் நாகார்ஜுனா ஜோடியாக நடிக்க சமந்தாவை அணுகியபோது இதுவரை ரூ.2 கோடி சம்பளம் வாங்கிய அவர் ரூ.3 கோடியாக உயர்த்தி கேட்டதாகவும் அந்த தொகையை கொடுத்து சமந்தாவை ஒப்பந்தம் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோல் மற்ற படங்களில் நடிக்கவும் ரூ.3 கோடி சம்பளத்தை நிர்ணயித்துள்ளார்.