சினிமா செய்திகள்

நடன இயக்குனருடன் நடிகை சனாகான் காதல் + "||" + With dance director Actress love sana khan actress

நடன இயக்குனருடன் நடிகை சனாகான் காதல்

நடன இயக்குனருடன் நடிகை சனாகான் காதல்
தமிழில் சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சனாகான். மலையாளத்தில் மறைந்த நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையான கிளைமாக்ஸ் படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
இந்தி பட உலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். சனாகானுக்கும், சினிமா நடன இயக்குனர் மெல்வின் லூயிசுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் சில மாதங்களுக்கு முன்பு டி.வி. நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றனர். அப்போது நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. காதல் பற்றி இருவரும் பதில் சொல்லாமல் இருந்தனர். தற்போது சனாகான் மெல்வினுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-


“உன்னை சந்திப்பதுவரை எனக்கு காதல் வரும் என்று தெரியவில்லை. உன்னிடம் நான் கண்டதை வாழ்நாள் முழுவதும் சிலர் தேடுகிறார்கள். ஒவ்வொரு நிமிடமும் உனது காதலில் திளைக்கிறேன். ஒவ்வொரு நாளும் சிறந்த விஷயங்களை உன்னிடம் இருந்து தெரிந்துகொள்கிறேன். என்னை நீ அழகாக மாற்றிவிட்டாய். எனது காதலை வெளிப்படுத்த வார்த்தைகள் போதவில்லை. எனது வாழ்க்கையில் நீ வந்தது அதிர்ஷ்டம். எனது இதயத்தை உன்னிடம் கொடுத்ததுதான் வாழ்க்கையில் நான் உருப்படியாக செய்த காரியம்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார். நானும் மெல்வினும் விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. எஸ்.ஜே.சூர்யா காதலை நிராகரித்த நடிகை
எஸ்.ஜே.சூர்யாவின் காதலை நடிகை பிரியா பவானி சங்கர் நிராகரித்ததாக தகவல் பரவி வருகிறது.
2. முகநூலில் மலர்ந்த காதல்: கனடா ஆசிரியைக்கு மாலை சூடிய வடமாநில வாலிபர்
முகநூல் மூலம் வளர்ந்த காதலால், கனடா ஆசிரியையை வடமாநில வாலிபர் திருமணம் செய்து கொண்டார்.
3. தேசம் கடந்த காதல்: சீன பெண்ணை மணந்த சேலம் டாக்டர்
ஆஸ்திரேலியா அரசு மருத்துவமனையில் பணிபுரியும் சேலம் டாக்டர், சீன பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
4. சங்கரன்கோவில் அருகே, இளம்பெண்ணை காதலித்து திருமணத்துக்கு மறுத்த என்ஜினீயர் கைது
சங்கரன்கோவில் அருகே இளம்பெண்ணை காதலித்து திருமணத்துக்கு மறுத்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
5. அமெரிக்காவில் சோகம்: கடலுக்கு அடியில் காதலை சொன்னவர் நீரில் மூழ்கி பலி
அமெரிக்காவில் கடலுக்கு அடியில் காதலை சொன்னவர் நீரில் மூழ்கி பலியானார்.