சினிமா செய்திகள்

படுக்கைக்கு அழைத்ததாக நடிகர் புகார் + "||" + Actor complains about being invited to bed

படுக்கைக்கு அழைத்ததாக நடிகர் புகார்

படுக்கைக்கு அழைத்ததாக நடிகர் புகார்
நடிகைகள் ‘மீ டூ’வில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்கள்.
தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகினர் இதில் சிக்கி உள்ளனர்.  இந்த நிலையில் இந்தி நடிகர் விவேக் தஹியா பட வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்தாக குற்றம் சாட்டி உள்ளார்.

இவர் இந்தி தொலைக்காட்சிகளில் நடித்து பிரபலமாகி படங்களில் நடித்து வருகிறார். இவரது மனைவி திவ்யங்கா திரிபாதி டெலிவிஷன் நடிகையாக இருக்கிறார். விவேக் தஹியா அளித்த பேட்டி வருமாறு:-

“பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது சினிமா துறையில் சகஜமாக நடக்கிறது. அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்வது அவரவர் கையில் இருக்கிறது. நான் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எனது மனசாட்சிப்படி நடந்தேன். சினிமாவில் நடிக்க வந்ததும் ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியலை கொடுத்து அவர்களை சந்திக்கும்படி சொல்வார்கள்.

ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் அழைப்பின் பேரில் அவரது அலுவலகத்துக்கு நான் சென்றேன். அப்போது நடிப்பு வாய்ப்புக்காக பணம் கேட்டார். நான் மறுத்துவிட்டேன். உடனே சிலரை திருப்திப்படுத்த படுக்கைக்கு செல்லுமாறு கூறினார். இதுமாதிரி கேவலமான காரியங்களை செய்து படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டேன்.”

இவ்வாறு விவேக் தஹியா கூறியுள்ளார். நடிகர் ஒருவர் பாலியல் புகார் சொல்லி இருப்பது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.