சினிமா செய்திகள்

இத்தாலி அரசிடம் அடிமையாக இருந்தோம் -காங்கிரசை மறைமுகமாக விமர்சிக்கும் நடிகை + "||" + In a Veiled Attack on Sonia Gandhi, Kangana Ranaut Says ‘We Were Earlier Slaves of Italian Govt’

இத்தாலி அரசிடம் அடிமையாக இருந்தோம் -காங்கிரசை மறைமுகமாக விமர்சிக்கும் நடிகை

இத்தாலி அரசிடம் அடிமையாக இருந்தோம் -காங்கிரசை மறைமுகமாக  விமர்சிக்கும் நடிகை
நடிகை கங்கனா ரணாவத், காங்கிரஸ் கட்சியை மறைமுகமாகவும், நேரடியாகவும் விமர்சித்துள்ளார்.
மும்பை

நாடாளுமன்றத் தேர்தலுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். அத்துடன் பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாபச்சன் அவரது குடும்பத்தினர்,  பிரியங்கா சோப்ரா, கஜோல், அஜய் தேவ்கன், அமீர் கான், கரீனா கபூர், மாதுரி தீக்ஷித், கங்கனா ரனாவத், சோனாலி பிந்த்ரே உள்ளிட்ட பலரும் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.

வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கங்கனா ரணாவத், காங்கிரஸ் கட்சியை மறைமுகமாகவும், நேரடியாகவும் விமர்சித்தார். காங்கிரசின் ஆட்சி நாட்டை வறுமையில் மட்டுமே வைத்திருந்ததாக சாடினார். 

மேலும் அவர் கூறும்போது, இன்றைய காலக்கட்டத்தில் தான் இந்தியா சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறேன். முன்னர் நாமெல்லாம் ஆங்கிலேயர்களிடமும், இத்தாலி அரசிடமும் அடிமையாக இருந்தோம். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தவரை நாம் இதுவரை பார்த்திராத வறுமையும், மாசும் நாட்டை பீடித்திருந்தது.

கங்கனா, இத்தாலி அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தி சோனியா காந்தியையும், காங்கிரஸ் கட்சியையும் மறைமுகமாக குறிப்பிட்டு விமர்சித்துள்ளார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியின் தலைமை பண்பினால் ஈர்க்கப்பட்டு சமீபகாலமாக மோடிக்கு ஆதரவாக பேசி வரும் கங்கனா, அரசியல் கருத்துக்களை அழுத்தமாக பதிவு செய்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. 2 வருடம் கழித்து ஷேவ் செய்த நடிகர் மாதவன்
நடிக்கும் சினிமாவுக்காக நடிகர் மாதவன் 2 வருடம் கழித்து ஷேவ் செய்துள்ளார்.
2. நடிகர் விஷாலுக்கு அக்டோபர் 9-ந் தேதி திருமணம்
நடிகர் விஷாலுக்கும் அவரது காதலியான அனிஷாவுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இவர்களது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
3. நடிகர் விஷாலின் அயோக்யா வெளியாகவில்லை : ரசிகர்கள் ஏமாற்றம் !
நடிகர் விஷாலின் அயோக்யா வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
4. பெண்களின் பொய்யான செக்ஸ் புகாரில் இருந்து ஆண்களை பாதுகாக்க "மென் டூ" இயக்கம்
ஆண்களுக்கு எதிராக பழி தீர்ப்பதற்காக, பாலியல் குற்ற வழக்குகளை பெண்கள் தவறாக பயன்படுத்துவதாக கூறி "மென் டூ" என்ற இயக்கத்தை, சமீபத்தில் பாலியல் குற்றவழக்கில் கைது செய்யப்பட்ட நடிகரின் நண்பர்கள் துவங்கியுள்ளனர். #mentoo
5. நடிகர் பார்த்திபன் தன்னை தாக்கியதாக உதவியாளர் புகார்
நடிகர் பார்த்திபன் தன்னை தாக்கியதாக, அவரது உதவியாளர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.