சினிமா செய்திகள்

பவதாரிணி இசையில்‘புயலில் ஒரு தோணி’ + "||" + pavatharani music puyalil oru thoni

பவதாரிணி இசையில்‘புயலில் ஒரு தோணி’

பவதாரிணி இசையில்‘புயலில் ஒரு தோணி’
இளையராஜாவின் மகள் பவதாரிணி ‘புயலில் ஒரு தோணி’ என்ற படத்துக்கு இசையமைக்கிறார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி தன்னை தேடி வரும் படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வருகிறார். அவர் இசையமைத்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். தெலுங்கில் ஒன்று, கன்னடத்தில் ஒன்று, இந்தியில் ஒன்று என பிற மொழிகளிலும் மிக குறைந்த படங்களுக்கே அவர் இசையமைத்துள்ளார்.

சில வருட இடைவெளிக்குப்பின் அவர், ‘புயலில் ஒரு தோணி’ என்ற படத்துக்கு இசையமைக்கிறார். இதில் புதுமுகங்கள் ஸ்ரீசேது, ரேவதி தரண், கோபிகிருஷ்ணன், ரித்திகா ஆகியோர் நடிக்கிறார்கள். ஜலீல் டைரக்டு செய்கிறார். ரோமிலா நல்லையா, மஜீத் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

“புயலில் ஒரு தோணி, பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் படமாக இருக்கும்” என்கிறார், டைரக்டர் ஜலீல்.