சினிமா செய்திகள்

நாளை நடக்க இருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெறாது -தனி அலுவலர் சேகர் அறிவிப்பு + "||" + It was going to be tomorrow Tamil Film Producers Association Cancellation of the General Council

நாளை நடக்க இருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெறாது -தனி அலுவலர் சேகர் அறிவிப்பு

நாளை நடக்க இருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெறாது -தனி அலுவலர் சேகர் அறிவிப்பு
நாளை நடைபெறுவதாக இருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற வாய்ப்பில்லை என தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி சேகர் அறிவித்துள்ளார்.
சென்னை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்த நிலையில், சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதற்காக தமிழக அரசின் பதிவுத்துறை அதிகாரி சேகர் என்பவர், சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் சென்னை ஐகோர்ட்டில்  வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் முன்னாள் நிர்வாகிகளால் நாளை நடைபெறுவதாக  திட்டமிடப்பட்டிருந்த சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற வாய்ப்பில்லை என சிறப்பு அதிகாரி அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு தயாரிப்பாளர் சங்க அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.