கதாநாயகிகளாக கொஞ்ச காலம்தான் நீடிக்க முடியும் - நடிகை நிவேதா பெத்துராஜ்
தமிழில் ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், உதயநிதியுடன் பொதுவாக என்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் படங்களில் நடித்தார். தற்போது அவர் கைவசம் 9 படங்கள் உள்ளன.
முன்னணி நடிகையாக வளரும் நிவேதா பெத்துராஜ் அளித்த பேட்டி வருமாறு:-
“எனது சொந்த மாநிலம் தமிழ்நாடு. சிறுவயதிலேயே குடும்பத்தோடு துபாய்க்கு சென்று அங்கேயே இருபது ஆண்டுகள் இருந்தோம். அழகி போட்டிகளில் ஜெயித்து தமிழ் படங்களில் நடிக்க அழைப்பு வந்ததால் நடிகையாகி விட்டேன். தமிழ் சினிமாவில் மொழி தெரிந்த கதாநாயகிகள் குறைவாகவே உள்ளனர். நான் சொந்தமாக தமிழில் டப்பிங் பேசுவது எல்லோருக்கும் பிடித்து இருக்கிறது.
துபாயில் வளர்ந்தாலும், ஒரு தமிழ் பெண் மாதிரியே இருந்தேன். தமிழ் கலாசாரமும் சம்பிரதாயமும் என்னை விட்டுப்போகவில்லை. எனக்கு பிடித்த படம் மவுன ராகம். அந்த படத்தில் வரும் இளையராஜா பாடல்கள் அனைத்தும் அற்புதமானவை. சினிமா துறையில் கதாநாயகிகள் வாழ்க்கை கொஞ்ச காலம்தான். ரசிகர்கள் ரசனை படத்துக்கு படம் மாறுகிறது. ஒரே மாதிரி நடித்தால் வெறுத்து விடுவார்கள். எனது குடும்ப உறுப்பினர்களை கஷ்டப்படுத்துகிற மாதிரி நடிக்க மாட்டேன். சமீபத்தில் போதை பொருளுக்கு அடிமையாகிற பெண் கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டனர். குடும்பத்தினருக்கு பிடிக்காது என்பதால் மறுத்து விட்டேன்.”
இவ்வாறு நிவேதா பெத்துராஜ் கூறினார்.
Related Tags :
Next Story