கோமாளி படத்தில் 9 வேடங்களில், ஜெயம் ரவி


கோமாளி படத்தில் 9 வேடங்களில், ஜெயம் ரவி
x
தினத்தந்தி 3 May 2019 3:58 AM GMT (Updated: 3 May 2019 3:58 AM GMT)

ஐசரிகணேஷ் தயாரிக்கும் ‘கோமாளி’ படத்தில் 9 வேடங்களில், ஜெயம் ரவி

தமிழ் பட உலகில், ‘நவராத்திரி’ படத்தில் முதல் முறையாக 9 வேடங்களில் நடித்து சாதனை புரிந்தவர், ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன். அவரை தொடர்ந்து, ‘தசாவதாரம்’ படத்தில் 10 வேடங்களில் நடித்து கமல்ஹாசன், புதிய சாதனையை ஏற்படுத்தினார்.

இவர்களை அடுத்து ஒரு புதிய படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு, ‘கோமாளி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், ஜெயம் ரவியுடன் முதல் முறையாக காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்திருக்கிறார்.

படத்தை டைரக்டு செய்து வரும் பிரதீப் ரங்கநாதன் கூறியதாவது:-

‘‘இது, ஜெயம் ரவி நடிக்கும் 24-வது படம். இதில் ராஜா, ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை, 1990-களில் வாழ்ந்த இளைஞர் உள்பட 9 வேடங்களில் அவர் நடிக்கிறார். இந்த 4 வேடங்கள் தவிர மற்ற வேடங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

படத்தின் இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

தொழில்நுட்ப துறையில் வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய உலகையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் சித்தரிக்கும் படம், இது. இதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறோம். பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது.’’


Next Story