20 வருடங்களாக கதாநாயகியாக நீடிக்கும் திரிஷாவின் 60-வது படம்


20 வருடங்களாக கதாநாயகியாக நீடிக்கும் திரிஷாவின் 60-வது படம்
x
தினத்தந்தி 4 May 2019 4:00 AM IST (Updated: 4 May 2019 12:09 AM IST)
t-max-icont-min-icon

திரிஷா 1999-ல் ஜோடி படத்தில் அறிமுகமாகி 20 வருடங்களாக சினிமாவில் நீடிக்கிறார். அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் ஜோடி சேர்ந்துள்ளார்.

திரிஷா 1999-ல் ஜோடி படத்தில் அறிமுகமாகி 20 வருடங்களாக சினிமாவில் நீடிக்கிறார். அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் ஜோடி சேர்ந்துள்ளார். ரஜினிகாந்துடன் நடிக்கவில்லை என்ற குறையும் பேட்ட படத்தில் சேர்ந்து நடித்ததன் மூலம் தீர்ந்தது. அவர் காலத்தில் நடிக்க வந்த கதாநாயகிகள் அக்காள், அண்ணி கதாபாத்திரங்களுக்கு மாறிய பிறகும் திரிஷா தொடர்ந்து கதாநாயகியாக நடிப்பது சக நடிகைகளை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். பேய் வேடங்களையும் ஏற்கிறார். திரிஷாவின் 60-வது படமாக ‘பரமபதம் விளையாட்டு’ தயாராகி உள்ளது. இதில் ரிச்சர்டு, நந்தா, ஏ.எல்.அழகப்பன், வேல ராமமூர்த்தி, சாம்ஸ், இமான் அண்ணாச்சி, சோனா ஆகியோரும் நடித்துள்ளனர். திருஞானம் டைரக்டு செய்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், இசைக்கோர்ப்பு பணிகள் நடக்கின்றன. சினிமா வாழ்க்கை குறித்து திரிஷா வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:-

“எல்லோருக்கும் வணக்கம். இந்த வருடம் எனக்கு மிகவும் முக்கியமானது. நான் நடித்த 60-வது படமாக பரமபதம் விளையாட்டு தயாராகி உள்ளது. இது ஒரு அரசியல் திகில் படம். இதுமாதிரி படங்களில் இதுவரை நான் நடிக்கவில்லை. ஒரு இரவில் காட்டுக்குள் நடக்கும் சம்பவங்களே கதை. இந்த படம் எல்லா வயது ரசிகர்களுக்கும் பிடிக்கும். விரைவில் திரைக்கு வர இருக்கிறது.” இவ்வாறு திரிஷா கூறியுள்ளார்.

Next Story