சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர ஆசை அழகிப் போட்டியில் வென்ற அக்சரா ரெட்டி பேட்டி + "||" + Wishing to win the beauty contest Akshara Reddy Interview

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர ஆசை அழகிப் போட்டியில் வென்ற அக்சரா ரெட்டி பேட்டி

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர ஆசை அழகிப் போட்டியில் வென்ற அக்சரா ரெட்டி பேட்டி
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர ஆசை என அழகிப் போட்டியில் வென்ற அக்சரா ரெட்டி தெரிவித்தார்.
சென்னை,

கேரளாவில் கடந்த வாரம் ‘மிஸ் சூப்பர் குளோப் இந்தியா-2019’ பட்டத்துக்கான அழகிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 22 மாநிலங்களை சேர்ந்த 240 பேர் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் தமிழகம் சார்பில் சென்னையை சேர்ந்த அக்சரா ரெட்டி(வயது 24) ‘மிஸ் சூப்பர் குளோப் இந்தியா-2019’ பட்டத்தை வென்றார்.


இதன் மூலம் வரும் அக்டோபர் மாதம் துபாயில் நடைபெறும் ‘மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்டு-2019’ பட்டத்துக்கான போட்டியில் அக்சரா ரெட்டி இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார். இந்தநிலையில் நேற்று சென்னையில் அக்சரா ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் சார்பில் ‘மிஸ் சூப்பர் குளோப் இந்தியா-2019’ போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக பெண் அரசியல் தலைவர்களில் ஜெயலலிதாவை எனக்கு பிடிக்கும். அவரைப்போல் சக்திவாய்ந்த அரசியல் தலைவியை நான் பார்த்ததே இல்லை.

தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவது வருத்தமளிக்கிறது. பாலியல் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அரசு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும். ‘மீடு’ மூலம் பெண்கள் தங்களுடைய கருத்தை தைரியமாக சொல்ல முடிகிறது. தமிழ் படங்களில் நடிக்க நான் தயாராக உள்ளேன்.

ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய், சூர்யா போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடிக்க ஆசை உள்ளது. பெண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள். ஆனால் அவர்களில் யார் மிகவும் அழகானவர்கள் என தேர்ந்தெடுக்க அழகிப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். ஆண்களுக்கான அழகு போட்டிகளும் நடைபெற்று வருகிறது. ஆனால் அது பெரிய அளவில் பிரபலமாகவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.