சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பாரா? (ஜே.கே.அருள்பதி, சேலம்)

ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ‘கியூ’வில் நிற்கும் நடிகைகளில், காஜல் அகர்வாலும் ஒருவர். சம்பளத்தை குறைத்துக் கொள்ளக்கூட அவர் தயாராக இருக்கிறாராம்!

***

கமல்ஹாசன் தயாரிக்க, ராஜேஷ் எம். டைரக்‌ஷனில் உருவாகும் ‘கடாரம் கொண்டான்’ படம் எந்த அளவில் உள்ளது? (எச்.அகமது செரீப், திருப்பத்தூர்)

‘கடாரம் கொண்டான்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது. அத்துடன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. தற்போது பின்னணி இசை சேர்ப்பு வேலை நடைபெறுகிறது. படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை சுருதிஹாசன் பாடியிருக்கிறார்!

***

குருவியாரே, நயன்தாரா–விக்னேஷ் சிவன் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள்? (மே.ரவீந்திரன், கோவை)

நாளைக்கே திருமணம் என்றால் கூட, விக்னேஷ் சிவன் சந்தோ‌ஷமாக தாலிகட்ட தயாராக இருக்கிறார். நயன்தாராதான் திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே வருகிறார்!

***

சோனியா அகர்வால், ஓவியா ஆகிய இருவரும் ஒரு படத்தில் அக்காள்–தங்கையாக நடிப்பார்களா? (பி.சதீஷ்குமார், சிங்கபெருமாள் கோவில்)

நிறைய சம்பளமும், மரியாதையான கவனிப்பும் இருந்தால் சோனியா அகர்வாலும், ஓவியாவும் சேர்ந்து நடிப்பார்களாம்!

***

குருவியாரே, சத்யராஜ், ஜெய், விஜய் ஆண்டனி ஆகிய மூன்று பேரும் இணைந்து நடிக்கும் ‘காக்கி’ படத்தில், போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பவர் யார்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

அந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பவர், விஜய் ஆண்டனி!

***

எம்.ஜி.ஆர். நடித்த ‘நாளை நமதே,’ எந்த இந்தி படத்தின் தழுவல்? (எஸ்.சி,ஸ்டீபன், மறவன் குடியிருப்பு)

‘யாதோங்கி பாராத்’ என்ற படத்தின் தழுவல்.

***

குருவியாரே, திரிஷா வருடந்தோறும் கோடை காலத்தில் தோழிகளுடன் ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு செல்வாரே...இந்த வருடம் எந்த நாட்டுக்கு போகிறார்? (ஆர்.புவன், காஞ்சிபுரம்)

திரிஷா ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்து விட்டார். அவர் இதுவரை போகாத ஒரு நாட்டுக்குப் போய் கோடை விடுமுறையை அனுபவிக்க திட்டமிட்டு இருக்கிறார்!

***

இப்போது உள்ள பழைய–புதிய நடிகர்களில், தீவிரமான ஆஞ்சநேய பக்தர் யார்? (என்.செண்பகமூர்த்தி, தஞ்சை)

நடிகர் அர்ஜுன். தனது சொந்த நிலத்தில், ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டிய ஒரே நடிகர் இவர்தான்!

***

குருவியாரே, விஜய் சேதுபதி–திரிஷா இருவரும் மீண்டும் ஜோடியாக நடிப்பார்களா? (ஜே.சகாயமேரி, தேனி)

‘96’ படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால், விஜய் சேதுபதியும், திரிஷாவும் ஜோடியாக நடிக்க தயாராக இருக்கிறார்களாம்!

***

சாய்பல்லவி பெற்றோர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்வாரா, காதல் திருமணம் செய்து கொள்வாரா? (எஸ்.ஏ.பரணி, ஈரோடு)

சாய்பல்லவி சினிமாவுக்கு வந்து 2 வருடங்கள்தான் ஆகிறது. அதற்குள் திருமணம் பற்றி யோசிக்கவில்லையாம்!

***

குருவியாரே, ‘அங்காடி தெரு’ அஞ்சலி என்ன ஆனார்? (ஏ.கதிரேசன், மும்பை)

அஞ்சலி தமிழில் ஒன்றும், தெலுங்கில் மூன்றுமாக ஒரே சமயத்தில் 4 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்!

***

நடிகர் மாதவன் டைரக்டர் ஆகிறார் என்பது உண்மையா? (பி.சந்தோஷ், திருச்சி)

உண்மைதான். அவர் டைரக்டு செய்யும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை!

***

குருவியாரே, அனுஷ்கா உடல் மெலிந்தபின் எப்படியிருக்கிறார்? (கே.நடராஜன், திருவண்ணாமலை)

குண்டான கதாநாயகிகள் என்ன தவறு செய்து உடலை மெலிய வைத்தார்களோ, அதே தவறைத்தான் அனுஷ்காவும் செய்து இருக்கிறார். உடலை மெலிய வைக்கிறேன் என்று அவர் அழகை குறைத்துக் கொண்டிருக்கிறார்!

***

சில பிரபல கதாநாயகிகள் திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே போகிறார்களே...ஏன்? (எம்.கோபால், திண்டுக்கல்)

திருமணம் ஆகாதவரைதான் அவர்கள் ‘கனவுக்கன்னிகளாக’ ரசிக்கப்படுகிறார்கள். திருமணம் ஆகிவிட்டால் மாற்றான் தோட்டத்து மல்லிகையாகி விடுகிறார்கள். கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் அவர்கள், அந்த பணத்தை இழக்க தயாராக இல்லை!

***

குருவியாரே, மிக சிறந்த குணச்சித்ர நடிகரான ராஜ்கிரண் திரையுலகுக்கு வந்தது எப்போது? அவர் நடிகராகவே தன் தொழிலை தொடங்கினாரா? (வி.டேவிட், பெரியகுளம்)

ராஜ்கிரண், 1980–களில் திரைப்பட வினியோகஸ்தராக தன் தொழிலை தொடங்கினார். அடுத்து அவர் தயாரிப்பாளராக மாறினார். பின்னர், கதாநாயகன் மற்றும் டைரக்டர் ஆனார்! சில வருட இடைவெளிக்குப்பின் அவர், குணச்சித்ர நடிகராகி விட்டார்!

***

அமலாபால் மறுமணம் செய்து கொள்வாரா, மாட்டாரா? (ஆர்.குணசிங், பெங்களூரு)

‘‘திருமணம் செய்து கொண்டால்தான் வாழ்க்கையா? செய்து கொள்ளாமலும் தனி மனுஷியாக வாழ்ந்து காட்ட முடியும் என்று அமலாபால் உறுதியாக நம்புகிறாராம் !

***

குருவியாரே, ஐஸ்வர்யா ராஜேஷ் பெயரில், அந்த ‘ராஜேஷ்’ யாரை குறிக்கிறது? அவருடைய கணவரையா? (எஸ்.சஞ்சய், அரக்கோணம்)

ஐஸ்வர்யா ராஜேசுக்கு திருமணமே ஆகவில்லை...அதற்குள் கணவர் எங்கிருந்து வருவார்? ‘ராஜேஷ்’ என்பது அவருடைய தந்தையை குறிக்கும்!

***

விக்ரம் பிரபுவுக்கு காதல் நாயகன் கதாபாத்திரம் பொருந்துகிறதா...? அல்லது அதிரடி நாயகனாக பொருந்துகிறாரா? (எம்.கே.ராமன், காரமடை)

காதல் நாயகன் என்பதை விட, அதிரடி நாயகன் வேடங்களுக்கே அவர் கச்சிதமாக பொருந்துவதாக ரசிகர்கள் சொல்கிறார்கள்!

***