சினிமா செய்திகள்

டைரக்டர் விக்னேஷ் சிவனை மணக்கிறார் நயன்தாராவுக்கு நவம்பரில் நிச்சயதார்த்தம் + "||" + Director Vignesh Sivan is married to Engagement to Nayantara November

டைரக்டர் விக்னேஷ் சிவனை மணக்கிறார் நயன்தாராவுக்கு நவம்பரில் நிச்சயதார்த்தம்

டைரக்டர் விக்னேஷ் சிவனை மணக்கிறார் நயன்தாராவுக்கு நவம்பரில் நிச்சயதார்த்தம்
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது நடக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பில் காதல் கொண்டு 4 வருடங்களாக ஜோடியாக சுற்றி வரும் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது நடக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து அவர்கள் வற்புறுத்தியும் வருகிறார்கள்.


நயன்தாராவின் முந்தைய 2 காதல்கள் தோல்வியில் முடிந்தன. அதுபோல் அவரை கைவிட்டு விடாதீர்கள் என்று விக்னேஷ் சிவனை வற்புறுத்தியும் வருகிறார்கள். நயன்தாராவுக்கு 34 வயது நிரம்பி விட்டதால் அவருக்கு விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். இப்போது நயன்தாராவுக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பட வாய்ப்புகள் குவிக்கின்றன. சமீபத்தில் அவர் நடித்து திரைக்கு வந்த அனைத்து படங்களும் நல்ல வசூல் பார்த்துள்ளன. ரஜினியின் தர்பார் மற்றும் விஜய் படம் உள்பட 6 படங்களில் நடித்து வருகிறார். சம்பளத்தையும் ரூ.4 கோடிக்கு மேல் உயர்த்தி விட்டார்.

இந்த நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்கள் காதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நவம்பர் மாதம் நிச்சயதார்த்ததை முடித்து அடுத்த வருடம் தொடக்கத்தில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

எனவே நவம்பருக்கு முன்பாக கைவசம் உள்ள அனைத்து படங்களையும் முடித்து கொடுத்து விடும் முடிவில் இருக்கிறார்.