சினிமா செய்திகள்

படங்களில் ஆபாசம், முத்த காட்சிகள் சமூகத்தை கெடுக்கும் பொறுப்பற்ற டைரக்டர்கள் நடிகை ஜீவிதா பாய்ச்சல் + "||" + Spoil the society Irresponsible directors Actress Jeevitha

படங்களில் ஆபாசம், முத்த காட்சிகள் சமூகத்தை கெடுக்கும் பொறுப்பற்ற டைரக்டர்கள் நடிகை ஜீவிதா பாய்ச்சல்

படங்களில் ஆபாசம், முத்த காட்சிகள் சமூகத்தை கெடுக்கும் பொறுப்பற்ற டைரக்டர்கள் நடிகை ஜீவிதா பாய்ச்சல்
தமிழ் பட உலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஜீவிதா இப்போது தெலுங்கு நடிகர் சங்கத்தில் செயலாளராக பதவி வகிக்கிறார்.
ஐதராபாத்தில் நடந்த ‘டிகிரி காலேஜ்’ என்ற தெலுங்கு படத்தின் பாடல் வெளியிட்டு விழாவில் ஜீவிதா பங்கேற்று பேசியதாவது:-

“சினிமா எடுப்பவர்களுக்கு சமூக பொறுப்பு வேண்டும். அர்ஜுன் ரெட்டி, ஆர்.எக்ஸ் 100 என்ற படங்களில் முத்த காட்சிகள் இருந்ததால் அதற்கு பிறகு வரும் எல்லா படங்களிலும் தாராளமாக முத்த காட்சிகளை புகுத்துகிறார்கள். கல்லூரி கதைகளை வைத்து தயாராகும் படங்களில் கண்டிப்பாக முத்த காட்சி இருக்க வேண்டும் என்ற அளவுக்கு சினிமா தரம் தாழ்ந்துவிட்டது.


சினிமா குடும்பத்தோடு சேர்ந்து பார்க்க கூடியது. இதை கருத்தில் கொள்ளாமல் பொறுப்பற்ற முறையில் இயக்குனர்கள் படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் செக்ஸ் இருக்கிறது. அது ரகசியமாக இருக்க வேண்டும். ஆனால் சினிமாவில் அதை வெளிச்சம் போட்டு காட்டி விடுகின்றனர். கவர்ச்சியை காட்டலாம் அதிலும் எல்லை இருக்கிறது.

பக்கத்தில் இருந்து படம் பார்க்கிறவர்கள் வெட்கப்படுவதுபோல் இருக்ககூடாது. எது தவறு, சரி என்பதை உணரும் அறிவு இளம் தலைமுறைக்கு இருக்கிறது. சினிமா படங்களை பார்த்து இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இளைஞர்கள் இருப்பது இல்லை.

ஆனாலும் புரிந்தும் புரியாத வயதில் இருக்கும் சிலர் அந்த காட்சிகளை பார்த்துவிட்டு இப்படித்தான் வாழ வேண்டும் என்று கருத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இரு மகள்களின் தாயாக இதை சொல்கிறேன். சமூகத்தை கெடுப்பதுபோல் படம் எடுக்காதீர்கள்.” இவ்வாறு ஜீவிதா பேசினார்.