சினிமா செய்திகள்

இடைவெளி எடுத்துக்கொண்டேனே தவிர, பா.ஜ.க.விலிருந்து விலகவில்லை-நடிகை காயத்ரி ரகுராம் + "||" + The actress Gayatri Raghuram is not excluded from the BJP

இடைவெளி எடுத்துக்கொண்டேனே தவிர, பா.ஜ.க.விலிருந்து விலகவில்லை-நடிகை காயத்ரி ரகுராம்

இடைவெளி எடுத்துக்கொண்டேனே தவிர, பா.ஜ.க.விலிருந்து விலகவில்லை-நடிகை காயத்ரி ரகுராம்
அரசியல் பற்றி கற்றுக்கொள்ள ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டேனே தவிர, பா.ஜ.க.விலிருந்து விலகவில்லை என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழில் சார்லி சாப்ளின், ஸ்டைல், பரசுராம், விசில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் காயத்ரி ரகுராம். நடன இயக்குனராகவும் இருந்து வருகிறார். இவர் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை ஆதரித்து சமூக வலைத்தளத்தில் கருத்துகளும் பதிவிட்டு வந்தார்.

சமீபத்தில் அவருக்கும் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை  சவுந்தரராஜனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், நேற்று காயத்ரி ரகுராம் திடீரென்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். நான் அரசியலில் இருந்து விலகி வெளியில் இருந்து எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அதற்காக கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொள்கிறேன். நான் எந்த கட்சியையும் ஆதரிக்கப்போவது இல்லை என்று கூறினார்.

அரசியல் பற்றி கற்றுக்கொள்ள ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டேனே தவிர, பா.ஜ.க. விலிருந்து விலகவில்லை. பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் அரசியல் கற்க விரும்புகிறேன் என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.