காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு!


காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு!
x
தினத்தந்தி 10 May 2019 3:00 AM IST (Updated: 9 May 2019 5:44 PM IST)
t-max-icont-min-icon

காவி ஆவி நடுவுல தேவி படத்தில் காதலை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு நடிக்கிறார்.

தம்பி ராமய்யா, யோகி பாபு, `நான் கடவுள்' ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி ஆகிய 4 பேரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு, `காவி ஆவி நடுவுல தேவி' என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். ராம் சுந்தர் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். வசனம் எழுதி புகழ்மணி டைரக்டு செய்கிறார். ஆரூரான் தயாரிக்கிறார்.

படத்தின் கதாசிரியர் வி.சி.குகநாதன் கூறியதாவது:-

`4 நகைச்சுவை நடிகர்களின் கூட்டணியில், இந்த படம் தயாராகி வருகிறது. இதில், காதலை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபுவும், காதலை பிரித்து வைக்கும் தாதாவாக, `நான் கடவுள் ராஜேந்திரனும், மலையாள மாந்திரீகனாக இமான் அண்ணாச்சியும் நடிக்கிறார்கள்.

படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது. படம், ஆகஸ்டு மாதம் திரைக்கு வரும்.''

Next Story