குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பிரியங்கா சோப்ரா
குழந்தை பெற்றுக்கொள்ள நடிகை பிரியங்கா சோப்ரா விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமாகி இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்றும் விரைவில் விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர் என்றும் சமீபத்தில் தகவல் வெளியானது. இதனை மறுத்த குடும்பத்தினர் இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருவதாக தெரிவித்தனர். இதனை உறுதிப்படுத்துவதுபோல் நிக்ஜோனாசுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை டுவிட்டரில் பிரியங்கா சோப்ரா வெளியிட்டார்.
திருமணம் ஆகி இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லையே என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு பிரியங்கா சோப்ரா தற்போது பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “குழந்தை பெற்றுக்கொள்ள எனக்கு ஆசை இருக்கிறது. ஆனால் அது கடவுள் நினைக்கும்போதுதான் நடக்கும்” என்றார்.
நிக்ஜோனாஸ் கூறும்போது, “குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சில நேரங்களில் நானும் விரும்புகிறேன். அது எனக்கு கனவாகவும் இருக்கிறது. அந்த அழகான கனவு விரைவாக நிறைவேற வேண்டும் என்ற ஆசைப்படுகிறேன். எனது வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை வாரிசுடன் பகிர்ந்து கொள்வேன்” என்றார்.
Related Tags :
Next Story