சினிமா செய்திகள்

“என் வளர்ச்சியை யாரும் தடுக்கவில்லை”நடிகை விசித்ரா விளக்கம் + "||" + Actress Vishithra interprets

“என் வளர்ச்சியை யாரும் தடுக்கவில்லை”நடிகை விசித்ரா விளக்கம்

“என் வளர்ச்சியை யாரும் தடுக்கவில்லை”நடிகை விசித்ரா விளக்கம்
என் வளர்ச்சியை யாரும் தடுக்கவில்லை என்று மீண்டும் நடிப்பது குறித்து நடிகை விசித்ரா விளக்கம் அளித்துள்ளார்.
முன்னாள் கதாநாயகிகள் பலர் மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளனர். அந்த வரிசையில் விசித்ராவும் நடிக்க வருகிறார். இவர் 1990-களில் முன்னணி நடிகையாக இருந்தார். தலைவாசல், தேவர் மகன், அமராவதி, ரசிகன், ஆத்மா, முத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மீண்டும் நடிப்பது குறித்து விசித்ரா கூறும்போது, “நான் 90 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். 18 வருடங்களுக்கு முன்னால் நடிப்பதை நிறுத்திவிட்டேன். இப்போது நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வருகின்றன. எனக்கும் நடிக்க அழைப்பு வருகிறது. வலுவான குணசித்திர வேடங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன். இதற்காக கதைகள் கேட்டு வருகிறேன்” என்றார்.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர், “தமிழில் நீங்கள் முன்னணி நடிகையாக வந்து இருக்க வேண்டியது. சத்யராஜால் அது போய்விட்டது” என்று கருத்து பதிவிட்டார். இதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள விசித்ரா, “எனது நடிப்பு திறமையின் மீது சத்யராஜ் எப்போதும் நம்பிக்கை வைத்து இருந்தார். அவர் இயக்குனராக அறிமுகமான ‘வில்லாதி வில்லன்’ படத்திலும் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்து இருந்தார்.

அந்த நேரத்தில் தமிழ் சினிமாவில் ஒரே மாதிரி கதையம்சத்தில் வெளியான படங்கள் என்னை நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்யவிடாமல் தடுத்துவிட்டன, வேறு யாரும் தடுக்கவில்லை” என்று கூறியுள்ளார்.