சினிமா செய்திகள்

விஜய்யின் 63-வது படத்தின் தலைப்பு என்ன?ரசிகர்கள் எதிர்பார்ப்பு + "||" + Vijay's 63rd film title

விஜய்யின் 63-வது படத்தின் தலைப்பு என்ன?ரசிகர்கள் எதிர்பார்ப்பு

விஜய்யின் 63-வது படத்தின் தலைப்பு என்ன?ரசிகர்கள் எதிர்பார்ப்பு
விஜய்யின் 63-வது படத்தின் தலைப்பை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
சர்கார் படத்துக்கு பிறகு அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நயன்தாரா கதாநாயகியாக வருகிறார். கதிர், ஜாக்கிஷெராப், ரெபா மானிகா, இந்துஜா, வர்ஷா பொல்லாமா, விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வருகிறார்கள். இதில் விஜய் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடிக்கிறார். இது விஜய்யின் 63-வது படம் என்பதால் ‘தளபதி 63’ என்ற பெயரிலேயே படப் பிடிப்பை நடத்துகின்றனர். படத்தின் தலைப்பை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்த நிலையில் படத்துக்கான பெயரை படக்குழுவினர் தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் பிறந்தநாளையொட்டி அடுத்த மாதம் (ஜூன்) 21-ந் தேதி மாலை படத்தின் தலைப்பையும், முதல் தோற்றத்தையும் வெளியிடுகின்றனர். முந்தைய படங்களான தெறி, மெர்சல், சர்கார் தலைப்புகளும் இதே தேதியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

வெறித்தனம், மைக்கேல் ஆகிய பெயர்களில் ஒன்றை அறிவிப்பார்கள் என்று இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது. இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. இந்த படத்தில் நடித்துள்ள பட்டிமன்ற நடுவரான ஞானசம்பந்தம் கூறும்போது, “விஜய் தனது 63-வது படத்தில் கால்பந்து பயிற்சியாளராக நடித்துள்ளார். இந்த படம் வெளியான பிறகு கால்பந்திற்கு ஏற்றம் வரும் என்று நம்புகிறேன்” என்றார்.