சினிமா செய்திகள்

‘3 டி’ தொழில்நுட்பத்துடன் அஞ்சலி நடித்த பேய் படம் + "||" + The ghost film played by Anjali With '3D' technology

‘3 டி’ தொழில்நுட்பத்துடன் அஞ்சலி நடித்த பேய் படம்

‘3 டி’ தொழில்நுட்பத்துடன் அஞ்சலி நடித்த பேய் படம்
அஞ்சலி படுபயங்கரமான ஒரு பேய் படத்தில் நடித்து இருக்கிறார். படத்துக்கு, ‘லிசா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
‘3 டி’ தொழில்நுட்பத்தில் தயாராகி இருக்கும் இந்த பேய் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்திருப்பவர், ராஜு விஸ்வநாத். ஒளிப்பதிவு செய்திருப்பதுடன், படத்தை தயாரித்தும் இருக்கிறார், பி.ஜி.முத்தையா.

அஞ்சலியுடன் யோகி பாபு, மைம் கோபி, பிரமானந்தம் மற்றும் புதுமுகங்கள் நடித்துள்ளனர். படத்தை பற்றி டைரக்டர் ராஜு விஸ்வநாத் கூறியதாவது:-

“நகரத்தில் வாழும் ஒரு இளம் பெண்ணுக்கு வெளிநாட்டில் நீண்ட காலம் அங்கேயே தங்கியிருந்து பணிபுரிகிற நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. விடுமுறையில் அவர் தமிழகம் திரும்பியதும், தாத்தா-பாட்டி வசிக்கும் ஒரு கிராமத்துக்கு செல்கிறாள். அந்த வீட்டில் ஒரு பேய் இருக்கிறது. அது, வெளிநாட்டில் இருந்து வந்த பெண்ணை பயமுறுத்துகிறது. பேயிடம் இருந்து அந்த பெண் தப்பினாளா, இல்லையா? என்பதே ‘லிசா’ படத்தின் கதை.”