ஹாலிவுட் படம் மூலம் தனுசுக்கு ஸ்பெயினில் ரசிகர்கள்


ஹாலிவுட் படம் மூலம் தனுசுக்கு ஸ்பெயினில் ரசிகர்கள்
x
தினத்தந்தி 17 May 2019 3:45 AM IST (Updated: 17 May 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ் நடித்த ‘த எக்ஸ்ட்ராடினரி ஆப் த பகிர்’ என்ற ஹாலிவுட் படத்துக்கு ஸ்பெயினில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

தனுஷ் ‘த எக்ஸ்ட்ராடினரி ஆப் த பகிர்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் இந்தியாவில் வெளியாகவில்லை. ஆனால் ரஷியா, இத்தாலி, நெதர்லாந்து, பிரான்ஸ் உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ளது. ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய 2 மொழிகளில் வெளியாகி உள்ளது. 

இந்த படத்துக்கு ஸ்பெயினில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தனுசுக்கு அந்த நாட்டில் ரசிகர்களும் உருவாகி உள்ளனர். இதைப் பார்த்த படத்தின் இயக்குனர் கென் ஸ்காட் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘‘த எக்ஸ்ட்ராடினரி ஆப் த பகிர் படத்துக்கு ஸ்பெயினில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஸ்பெயினில் உள்ளவர்கள் தனுசை மிகவும் நேசிக்கிறார்கள்’’ என்று குறிப்பிட்டு உள்ளார். 

இதனை தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்துள்ளார். இந்த படம் ஏற்கனவே நார்வே திரைப்பட விழாவிலும், பார்சிலோனா திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு விருதுகள் பெற்றுள்ளது என்பது குறிப்படத்தக்கது. தனுஷ் நடிப்பில் வடசென்னை, மாரி–2 ஆகிய படங்கள் கடந்த வருடம் திரைக்கு வந்தன. 

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது அசுரன் படத்தில் நடித்து வருகிறார். இதன் பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன.

Next Story