சினிமா செய்திகள்

நீண்ட இடைவெளிக்கு பிறகுஅனுஷ்கா மீண்டும் நடிக்கிறார் + "||" + Anushka Act again

நீண்ட இடைவெளிக்கு பிறகுஅனுஷ்கா மீண்டும் நடிக்கிறார்

நீண்ட இடைவெளிக்கு பிறகுஅனுஷ்கா மீண்டும் நடிக்கிறார்
நடிகை அனுஷ்கா மாதவனுடன் இணைந்து சைலன்ஸ் என்ற படத்தில் நடிக்கிறார்.
அனுஷ்கா 2005–ல் சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இருமொழிகளிலும் பெரிய கதாநாயகர்களுடனும் ஜோடி சேர்ந்தார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தும் திறமையை வெளிப்படுத்தினார். கடைசியாக ‘பாக்மதி’யில் 2017–ல் நடித்து முடித்தார். அதன்பிறகு அனுஷ்காவுக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. 

இஞ்சி இடுப்பழகி படத்தில் குண்டு பெண்ணாக நடிக்க உடல் எடையை கூட்டினார். அந்த படம் முடிந்த பிறகு கடும் உடற்பயிற்சிகள் மற்றும் யோகா செய்தும் எடையை அவரால் குறைக்க முடியவில்லை. இதனால் புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் மறுத்தனர்.  அனுஷ்காவுக்கு திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் அவசரம் காட்டினர். ஆனால் மாப்பிள்ளை அமையவில்லை. ஜாதகத்தில் தோ‌ஷம் இருப்பதாக கோவில்களுக்கு சென்று பரிகார பூஜைகளும் நடத்தினார். சினிமாவை விட்டு விலக அவர் முடிவு செய்துவிட்டதாகவும் தெலுங்கு பட உலகில் தகவல் பரவியது. 

இந்த நிலையில் 2 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அனுஷ்காவுக்கு புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. மாதவனுடன் இணைந்து சைலன்ஸ் என்ற படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்த உள்ளனர். இதற்காக விசாவுக்கு விண்ணப்பித்து நீண்ட நாட்களாக காத்திருந்தார். தற்போது அவருக்கு அனுமதி கிடைத்துள்ளது. சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நடிக்க உள்ளார்.