சினிமா செய்திகள்

கமலின் இந்தியன்–2 சிக்கல் தீர்ந்தது + "||" + Indian-2 problem was solved

கமலின் இந்தியன்–2 சிக்கல் தீர்ந்தது

கமலின் இந்தியன்–2 சிக்கல் தீர்ந்தது
‘இந்தியன்–2’ படப்பிடிப்பு ஜூன் மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கமல்ஹாசனின் ‘இந்தியன்–2’ படப்பிடிப்பு தொடங்குமா? என்று சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து சந்தேகம் கிளப்பி வருகிறார்கள். இந்த படத்துக்கான வேலைகளை சில மாதங்களுக்கு முன்பே இயக்குனர் ‌ஷங்கர் ஆரம்பித்தார். சில நாட்கள் படப்பிடிப்பை நடத்திய பிறகு கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று சூட்டிங்கை நிறுத்திவிட்டார். 

பின்னர் கமல்ஹாசன் தோற்றத்தில் மாற்றம் செய்த பிறகும் படப்பிடிப்பை தொடங்கவில்லை. தேர்தல் வேலைகளில் கமல் ஈடுபட்டதால் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு படத்தின் பட்ஜெட் விவகாரத்தில் ‌ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டு படத்தை கைவிட்டு விட்டதாக பேச்சு கிளம்பியது. இந்தியன்–2 படத்தை தயாரிக்க ‌ஷங்கர் வேறு 2 பெரிய தயாரிப்பு நிறுவனங்களை அணுகி இருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது ‌ஷங்கருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு லைகாவே ‘இந்தியன்–2’ படத்தை தயாரிப்பதாகவும் படப்பிடிப்பு ஜூன் மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையில் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.