சினிமா செய்திகள்

ஆதியுடன் மணிரத்னம் பேச்சு வார்த்தை! + "||" + Maniratnam is the primitive talk

ஆதியுடன் மணிரத்னம் பேச்சு வார்த்தை!

ஆதியுடன் மணிரத்னம் பேச்சு வார்த்தை!
‘பொன்னியின் செல்வன்’ படத்துக்காக
கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கும் முயற்சியில் டைரக்டர் மணிரத்னம் ஈடுபட்டு இருக்கிறார்.

இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழனாக அமிதாப்பச்சன், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, பழுவேட்டரையராக சத்யராஜ், பூங்குழலியாக நயன்தாரா, குந்தவையாக கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார்கள்.

படத்தை 2 பாகங்களாக உருவாக்க மணிரத்னம் திட்ட மிட்டு இருக்கிறார். அவரது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

பல கதாநாயகர்கள் இணைந்து நடிக்கிறார்கள். புதிதாக ஆதியுடன் மணிரத்னம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆதியை எந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது? என்ற விவரம் இன்னும் 2 நாட்களில் தெரிந்து விடும்.


தொடர்புடைய செய்திகள்

1. டிசம்பரில் படப்பிடிப்பு : பொன்னியின் செல்வனில் பிரபு
கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
2. மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வனில்’ இருந்து சத்யராஜ் திடீர் விலகல்!
‘பொன்னியின் செல்வனில்’ இருந்து சத்யராஜ் விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது.
3. ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 60 பிரபல நடிகர்கள்
‘பொன்னியின் செல்வன்’ படத்தில், 60 பிரபல நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள்.