சினிமா செய்திகள்

ஜீ.வி.பிரகாஷ் படத்தில் கிராமத்து பேய் அட்டகாசம் + "||" + GV Prakash is the village ghost ghakam

ஜீ.வி.பிரகாஷ் படத்தில் கிராமத்து பேய் அட்டகாசம்

ஜீ.வி.பிரகாஷ் படத்தில் கிராமத்து பேய் அட்டகாசம்
எழில் டைரக்‌ஷனில் ஜீ.வி.பிரகாஷ் படத்தில் கிராமத்து பேய் அட்டகாசம்
துள்ளாத மனமும் துள்ளும், தீபாவளி, பூவெல்லாம் உன் வாசம், மனம் கொத்தி பறவை, வெள்ளக்கார துரை ஆகிய படங்களை டைரக்டு செய்த எழில், அடுத்து ஒரு பேய் படத்தை டைரக்டு செய்து வருகிறார்.

அதில் ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆந்திர அழகி ஈஷா ரெபா நடிக்கிறார். ரமேஷ் தயாரிக்கிறார். படத்தை பற்றி டைரக்டர் எழில் கூறுகிறார்:-

‘‘இது, ஒரு கிராமத்து பேய் கதை. படத்தின் கதையை, ‘‘ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பு’’ என்று ஒரே ஒரு வரியில் சொல்லி விடலாம். அவள் பேயாக வந்து செய்யும் அட்டகாசங்கள்தான் படம். சாம்ஸ், சதீஷ் இருவரும் நகைச்சுவை வேடங்களில் நடிக்கிறார்கள்.

சத்யா இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். முருகன் எழுதிய கதைக்கு திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்து வருகிறேன். படம், திருநெல்வேலியில் வளர்ந்து வருகிறது. முக்கிய காட்சிகளை பாங்காக்கில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது. படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. எந்த ஒரு பெயரை தேர்ந்தெடுத்தாலும், அந்த பெயரை நாங்கள் வைத்து இருக்கிறோம் என்று உரிமை கொண்டாடுகிறார்கள். படத்துக்கு பெயர் சூட்டுவதில் தாமதம் ஏற்படுவதற்கு இதுதான் காரணம்.’’