சினிமா செய்திகள்

இலங்கை படப்பிடிப்பை ரத்து செய்த படக்குழு + "||" + Film crew canceling shooting in Sri Lanka

இலங்கை படப்பிடிப்பை ரத்து செய்த படக்குழு

இலங்கை படப்பிடிப்பை ரத்து செய்த படக்குழு
குண்டு வெடிப்பு காரணமாக இலங்கை படப்பிடிப்பை ரத்து செய்த படக்குழு
சரண் டைரக்‌ஷனில், ராதிகா சரத்குமார் தாதாவாக நடித்து வரும் படம், ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தை பற்றி டைரக்டர் சரண் கூறியதாவது:-

‘‘இந்த படத்தில் கதாநாயகன் ஆரவ், பெரம்பூர் ரவுடியாக நடிக்கிறார். மருத்துவ கல்லூரி மாணவியாக காவ்யா தாப்பர், ஆங்கிலோ இந்திய பெண்ணாக நிகிஷா படேல் ஆகிய இருவரும் நடித்து வருகிறார்கள். மருத்துவ கல்லூரி டீன் ஆக நாசர் நடிக்கிறார்.

எந்த ஒரு ரவுடி கதாபாத்திரமும் இந்திய சினிமாவில் இதுவரை சந்தித்திராத ஒரு பிரச்சினையில் ஆரவ் மாட்டிக் கொள்கிறார். அதில் இருந்து அந்த கதாபாத்திரம் வெளியே வருவது எப்படி? என்பதே திரைக்கதை. படத்துக்கு சைமன் கே.கிங் இசையமைக்கிறார்.

90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது. ஒரு சண்டை காட்சியும், ஒரு பாடல் காட்சியும் மட்டும் படமாக்க வேண்டியிருக்கிறது. அந்த காட்சிகளை இலங்கையில் படமாக்க திட்டமிட்டு இருந்தோம்.

அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததால், இலங்கை படப் பிடிப்பை ரத்து செய்து, அதற்கு பதில் புதுச்சேரியில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்து இருக்கிறோம்.’’