சினிமா செய்திகள்

நடன இயக்குனர் தினேஷ் நாயகனாக நடிக்கும் படம் + "||" + Dancing Director Dinesh is the heroine

நடன இயக்குனர் தினேஷ் நாயகனாக நடிக்கும் படம்

நடன இயக்குனர் தினேஷ் நாயகனாக நடிக்கும் படம்
பருத்தி வீரன், ஆடுகளம், இறுதிசுற்று, ஒருகல் ஒருகண்ணாடி ஆகிய படங்களுக்கு நடனம் அமைத்தவர், தினேஷ்
தினேஷ் ‘குப்பை கதை’ என்ற படத்தில் கதாநாயகன் ஆனார். தொடர்ந்து அவர் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன், ‘ஆடுகளம்’ முருகதாஸ், சாயாஜி ஷின்டே ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

படத்தை டைரக்டு செய்யும் சக்திவாசன் கூறியதாவது:-

‘‘நகரத்தில் வாழும் ஒரு துடிப்பான இளைஞன், மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். நிரந்தர வேலையில் இல்லாத அவன், அவ்வப்போது சமயோசிதமாக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தில் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கிறான்.

இந்த நிலையில், அவன் ஒரு பெரிய திருட்டில் ஈடுபட்டு வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆக விரும்புகிறான். அவனுக்கு அந்த சந்தர்ப்பம் அமைந்ததா, அதில் அவன் வெற்றி பெற்றானா? என்பதே இந்த படத்தின் கதை.

கோபி கிருஷ்ணா, கலைஅரசி சாத்தப்பன், டாக்டர் ரேவதி ரெங்கசாமி ஆகியோர் தயாரிக்கிறார்கள்.