சினிமா செய்திகள்

கேன்ஸ் திரைப்படவிழா: நடிகைகள் பிரியங்கா சோப்ரா, கங்கனா ரனாவத் ஆடைகள் மீது விமர்சனம் + "||" + Kangana stuns in an edgy pant-suit for Cannes party

கேன்ஸ் திரைப்படவிழா: நடிகைகள் பிரியங்கா சோப்ரா, கங்கனா ரனாவத் ஆடைகள் மீது விமர்சனம்

கேன்ஸ் திரைப்படவிழா: நடிகைகள் பிரியங்கா சோப்ரா, கங்கனா ரனாவத் ஆடைகள் மீது விமர்சனம்
கேன்ஸ் திரைப்படவிழாவில் பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, கங்கான ரனாவத் ஆடைகள் விமர்சனத்திற்கு உள்ளானது.
பாரீஸ் 

பிரான்ஸ் கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கியுள்ள நிலையில், பிரான்சில் கேன்ஸ் திரைப்பட விழா நடந்து கொண்டிருக்கிறது. இந்த விழாவில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் கலந்து கொண்டு விதவிதமான ஆடைகளில் காட்சி அளித்தனர். 

சன்னி பிரெஞ்ச் ரிவேரியா எனும் சுற்றுலாத் தலத்தில் கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதில் கலந்துக் கொண்ட தீபிகா படுகோன் சமூக வலைதளத்தில் கண்கவரும் ஆடையுடன் தாம் கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்துக் கொண்டதற்கான படங்களை வெளியிட்டுள்ளார்.

இதே போன்று நடிகைகள் பிரியங்கா சோப்ராவும் கங்கனா ரனாவத்தும் டிசைனர் ஆடைகளை அணிந்து வந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். கங்கனா, பிரியங்கா அணிந்த உடைகள்  விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக திரையிடப்பட்ட பக்குராவ் என்ற படத்தின் அறிமுகக் காட்சியில் தொலைக்காட்சி நடிகை ஹினா கான் கண்கவரும் ஆடையை அணிந்துவந்து ஒயில் நடை நடந்தார். மேலும் ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர் போன்ற மேலும் பல பாலிவுட் நடிகைகளும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.


ஆசிரியரின் தேர்வுகள்...