சவாலான வேடங்களை விரும்பும் சோனாக்சி
சவாலான வேடங்களை ஏற்று நடிக்க விரும்புகிறேன் என்று சோனாக்சி சின்ஹா கூறியுள்ளார்.
தமிழில் லிங்கா படத்தில் ரஜினிகாந்துடன் நடித்தவர் சோனாக்சி சின்ஹா. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-
“மனிதர்களுக்கு சந்தோஷம்தான் மிகப்பெரிய பலம். அந்த பலம் வேலை செய்வதில் இருக்கிறது. எந்த பிரச்சினையில் இருந்தும் வெளியே வர ஒரு மருந்து இருக்கிறது. அதுதான் வேலை. வேலை செய்வதில் மூழ்கிவிட்டால் சிக்கல்களில் இருந்து வெளியே வந்துவிட முடியும். எனது சொந்த அனுபவத்தில் இதை சொல்கிறேன். ஓய்வு நேரத்தை உடற்பயிற்சி கூடத்திலும், ஓவியம் வரைவதிலும் செலவிடுகிறேன். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிக்க ஆசை உள்ளது. முதலில் ‘அகிரா’ என்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்தேன். அதன் பிறகு நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். அகிரா எனக்குள் இருந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்திய படம்.
இதுமாதிரி படங்களில் நடிக்க விரும்புகிறேன். சவாலான கதைகளை எதிர்பார்க்கிறேன். அப்போதுதான் நமக்குள் இருக்கும் இன்னொரு கோணம் தெரிய வரும். பல கதாநாயகிகள் ஒரே படத்தில் சேர்ந்து நடிக்கவும் தயங்குவது இல்லை. வாழ்க்கையில் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். மற்றவர்களையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும்.”
இவ்வாறு சோனாக்சி சின்ஹா கூறினார்.
Related Tags :
Next Story