சினிமா செய்திகள்

ஹேராம் முதல் கோட்சே வரைதொடர் சர்ச்சைகளில், கமல்ஹாசன் + "||" + Kamal Series of controversies

ஹேராம் முதல் கோட்சே வரைதொடர் சர்ச்சைகளில், கமல்ஹாசன்

ஹேராம் முதல் கோட்சே வரைதொடர் சர்ச்சைகளில், கமல்ஹாசன்
நாதுராம் கோட்சே பற்றி கருத்து சொல்லி எதிர்ப்பிலும் பிரசாரத்தில் முட்டை, செருப்பு வீச்சுகளிலும் சிக்கி உள்ளார் கமல்ஹாசன்.
கமல்ஹாசனை கைது செய்யும்படி நீதிமன்றங்களில் வழக்கு போட கிளம்பி உள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யும்படியும் குரல் ஒலிக்கின்றன.

கமல்ஹாசனால் கோட்சே விவகாரத்தை பலர் கையில் எடுத்து அவரது வன்செயல் சரியா? தவறா என்று வலைத்தளங்களில் விவாதமாக்கி வருகிறார்கள். வட இந்தியாவையும் கமல் சொன்ன வார்த்தை உலுக்கி உள்ளது. இந்த சர்ச்சை தேர்தலில் அவருக்கு சாதகமாக அமையுமா? பாதகத்தை ஏற்படுத்துமா? என்றும் அரசியல் நோக்கர்கள் ஆருடம் கணிக்க தொடங்கி உள்ளனர்.

நடிகை கஸ்தூரியோ, “கமல் 30 வினாடி பேசியதை 3 நாட்களாக பேசிக்கொண்டு இருக்கிறோமே.. பேசி பேசியே ஒரு படத்தை சூப்பர் ஹிட் ஆக்கினவங்க, இப்போது கமல் பேசியதை நாடுமுழுக்க பிரபலப்படுத்தி விட்டார்கள். இதைவிட ஒரு சூப்பர் பிரசாரம் அவருக்கு அமையுமா? நான் நினைக்கிறேன். 4 தொகுதிகளில் நினைத்ததை விட அதிகமாகவே ஓட்டு வாங்குவார் பாருங்க” என்கிறார்.

கமலுக்கு சர்ச்சைகள் புதிது அல்ல. தேவர் மகன், விருமாண்டி திரைப்படங்கள் எதிர்ப்புகளை தாண்டியே திரைக்கு வந்தன. விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்ததால் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று அவர் ஆதங்கப்பட்ட நிலைமை இருந்தது. அதற்கு முன்பு கமல்ஹாசன் இயக்கி நடித்த ஹேராம் படத்தின் கதைக்களத்திலும் தேசத்தின் பிரிவினைக்கு காந்திதான் காரணம் என்று அவரை கொலை செய்ய திட்டமிடும் சர்ச்சை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்போது கோட்சே பற்றி பேசி நாடுமுழுவதும் மீண்டும் பரபரப்பாகி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. “மருதநாயகம் படம் தயாராகும்” -கமல்ஹாசன்
மருதநாயகம் படத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை எடுத்துக்கொண்டு இருக்கிறேன் என்று கமல்ஹாசன் கூறினார்.
2. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
3. 19 ஆண்டுகளுக்கு பின் இணையும் கமல்ஹாசன்-ஏ.ஆர். ரகுமான்
கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல்ஹாசனும், ஏ.ஆர் ரகுமானும் 19 ஆண்டுகளுக்கு பின் இணைந்துள்ளனர்.
4. ‘இந்து தீவிரவாதி’ என்று சர்ச்சை பேச்சு: கரூர் கோர்ட்டில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்ற கமல்ஹாசன்
இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது ‘இந்து தீவிரவாதி’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கரூர் கோர்ட்டில் ஆஜராகி கமல்ஹாசன் முன்ஜாமீன் பெற்றார்.
5. கோட்சே குறித்த கருத்து 3 பாரதீய ஜனதா தலைவர்களுக்கு நோட்டீஸ்
கோட்சே குறித்து ஆதரித்து கருத்து கூறிய் 3 தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.