சினிமா செய்திகள்

‘மகரிஷி’ இயக்குனரை பாராட்டிய சிரஞ்சீவி + "||" + Chiranjeevi praised the director of 'Maharishi'

‘மகரிஷி’ இயக்குனரை பாராட்டிய சிரஞ்சீவி

‘மகரிஷி’ இயக்குனரை பாராட்டிய சிரஞ்சீவி
தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மகேஷ்பாபு
மகேஷ்பாபு தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். இவரது 25-வது படம், ‘மகரிஷி’. கடந்த 9-ந் தேதி வெளியான இந்தத் திரைப்படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. கார்த்தி, நாகர்ஜுனா நடிப்பில் வெளியான ‘தோழா’ படத்தை இயக்கிய, வம்சி பைடிப்பள்ளி இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.

வெளிநாட்டில் மிகப்பெரிய நிறுவனத்தில், உயர்ந்த பொறுப்பில் இருக்கும் கதாநாயகன், தன்னுடைய நண்பனுக்காக இந்தியாவுக்கு வந்து கிராமத்தில், விவசாயப் பணியை மேற்கொள்வதோடு, அங்கு எரிவாயு எடுக்க விவசாய நிலங்களை அபகரிக்க நினைக்கும் கார்ப்பரேட் கம்பெனியின் முதலாளிகளோடும் மோதுகிறார்.

விவசாயம் தொடர்பான இந்தக் கதை, தெலுங்கில் முன்னணி நடிகரான சிரஞ்சீவிக்கு பிடித்துவிட்டதாம். உடனடியாக அவர் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளியை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘மகரிஷி’ படத்தைப் பற்றி பாராட்டி பேசியிருக்கிறார்.

மேலும் ‘என்னுடைய நம்பரை உங்கள் போனில் பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள்’ என்றும் கூறியிருக்கிறார். அதன்மூலம் தனக்கும் ஒரு கதையை தயார் செய்யும்படி சிரஞ்சீவி சூசகமாக தெரிவித்திருப்பதாக தெலுங்கு திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.