சினிமா செய்திகள்

பகத் பாசிலை புகழ்ந்த இந்தி இயக்குனர் + "||" + Hindi director who praised Bhagat Basil

பகத் பாசிலை புகழ்ந்த இந்தி இயக்குனர்

பகத் பாசிலை புகழ்ந்த இந்தி இயக்குனர்
அமீர்கான் நடிப்பில் வெளியான மிகப்பெரிய வெற்றியைப் பெற்றத் திரைப்படம் ‘தங்கல்’
இந்தியா, சீனா போன்ற நாடுகளிலும் வெளியிடப்பட்டு, மிகப்பெரிய அளவில் வருவாய் ஈட்டிய திரைப்படங்களிலும் முதல் மூன்று இடங்களுக்குள் இந்தத் திரைப்படம் இருக்கிறது. இந்தப் படத்தை இயக்கியவர் பிரபல இந்தி இயக்குனரான நிதேஷ் திவாரி.

இவர் சமீபத்தில் பகத் பாசில் நடித்த ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ திரைப்படத்தைப் பார்த்திருக்கிறார். அந்தப் படத்தில் பகத்தின் நடிப்பால் கவர்ந்திழுக்கப்பட்ட நிதேஷ் திவாரி, அவர் நடிப்பில் வெளியான ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ஞான பிரகாசன்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ என அனைத்துப் படங்களையும் ஒன்றுவிடாமல் பார்த்து விட்டாராம்.

இதுபற்றி இயக்குனர் நிதேஷ் திவாரி கூறும்போது, “எந்த ஒரு சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், அதில் பிறர் பிரமிக்கும், வியக்கத்தக்க நடிப்பை கொடுக்கிறார், பகத் பாசில்.

அவரது நடிப்பையும், அவரையும் மிகவும் தாமதமாகத்தான் நான் கண்டுபிடித்திருக்கிறேன். ஆனால் இப்போது அவருடைய மிகப்பெரிய ரசிகராக மாறிவிட்டேன். இதே போல் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும், வித்தியாசமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.


ஆசிரியரின் தேர்வுகள்...