சினிமா செய்திகள்

தெலுங்கில் வெளியாகும் சூர்யா படம் + "||" + Suriya is the film released in Telugu

தெலுங்கில் வெளியாகும் சூர்யா படம்

தெலுங்கில் வெளியாகும் சூர்யா படம்
தெலுங்கு திரையுலகில் தமிழ் நடிகர்கள் படங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளதால் அவற்றை தெலுங்கு மொழியில் டப்பிங் செய்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் அதிக தியேட்டர்களில் திரையிடுகிறார்கள். இந்த படங்கள் தெலுங்கு நடிகர்கள் படங்களுக்கு இணையாக வசூல் குவிக்கின்றன.
இந்த மாதம் இறுதியில் திரைக்கு வரும் சூர்யாவின் என்.ஜி.கே படத்தையும் தெலுங்கில் வெளியிடுகின்றனர். இந்த படத்துக்கு சூர்யாவே தெலுங்கில் டப்பிங் பேசி இருக்கிறார். இது சூர்யாவின் தெலுங்கு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்.ஜி.கே படத்தில் சூர்யா ஜோடியாக ரகுல்பிரீத் சிங், சாய்பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.


தேவராஜ், உமா பத்மநாபன், இளவரசு, பொன் வண்ணன் உள்பட மேலும் பலர் உள்ளனர். செல்வராகவன் இயக்கி உள்ளார். அரசியல் கதையம்சம் உள்ள படமாக தயாராகி உள்ளது. இந்த படம் தாமதாக திரைக்கு வருவதாக விமர்சனங்கள் கிளம்பின. பல மாதங்களாக இதன் படப்பிடிப்பை கிடப்பில் போட்டு விட்டதாகவும் குற்றம் சாட்டினர்.

என்.ஜி.கே கதையை போல் இன்னொரு படம் திரைக்கு வந்ததால் கதையை மாற்றி படப்பிடிப்பை நடித்தியதாகவும் இதனால் படம் முடிவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.