சினிமா செய்திகள்

‘‘எனது மனம் மென்மையானது: கோபம் அதிகம் வரும்’’–காஜல் அகர்வால் + "||" + My mind is soft The anger will be too much Kajal Agarwal

‘‘எனது மனம் மென்மையானது: கோபம் அதிகம் வரும்’’–காஜல் அகர்வால்

‘‘எனது மனம் மென்மையானது: கோபம் அதிகம் வரும்’’–காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. ஜெயம்ரவியுடன் ‘கோமாளி’ படத்திலும் நடித்துள்ளார்.
கமல்ஹாசனின் ‘இந்தியன்–2’ படத்துக்கும் ஒப்பந்தம் செய்துள்ளனர். சினிமா வாழ்க்கை குறித்து காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:–

‘‘நான் 15 ஆண்டுகளாக நடித்துகொண்டு இருக்கிறேன். இவ்வளவு நீண்ட எனது சினிமா பயணத்தில் நான் நடித்த கதைகள் மற்றும் கதாபாத்திரங்கள் எனது மனதை தொட்டு இருக்கின்றன. கதை கேட்கும்போதே அந்த கதாபாத்திரத்தில் என்னை நான் கற்பனை செய்து பார்த்துக்கொள்வேன். ஒவ்வொரு கதாபாத்திரமும் புதிய வாழ்க்கையை அனுபவித்ததுபோல் செய்தது.


அந்த மாதிரி அனுபவமும் வாய்ப்பும் நடிகர்களுக்கு மட்டும்தான் கிடைக்கிறது. ஒவ்வொரு கதை கதாபாத்திரங்களும் ஆச்சரியம், ஆனந்தம், சந்தோ‌ஷம் போன்ற வித்தியாசமான அனுபவங்களுக்கு ஆளாக்கும். அதில் இருந்து வெளியே வர முடியாமல் இருப்பேன். வீட்டுக்கு வந்தால்கூட கதாபாத்திரத்தோடு வாழ்கிறமாதிரி இருக்கும். இப்போது அதில் இருந்து விடுபட பழகி விட்டேன்.

நடிகர்கள் நடித்த கதாபாத்திரங்களில் இருந்து வெளியே வராவிட்டால் புதிய படங்களில் அந்த கதாபாத்திரங்களாக மாறுவது கஷ்டமாகி விடும். எனது மனது மென்மையானது. கோபம் சீக்கிரம் வந்து விடும். அன்பும் அதிகமாக காட்டுவேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எப்படி இருந்தேனோ அப்படியே இப்போதும் இருக்கிறேன்.’’ இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.