“நடிகர்கள் உயர்வுக்கு டைரக்டர்களே காரணம்” பட விழாவில் ஜீவா பேச்சு


“நடிகர்கள் உயர்வுக்கு டைரக்டர்களே காரணம்” பட விழாவில் ஜீவா பேச்சு
x
தினத்தந்தி 21 May 2019 11:45 PM GMT (Updated: 21 May 2019 7:40 PM GMT)

ஜீவா நடித்துள்ள புதிய படம் ‘ஜிப்ஸி’. ராஜு முருகன் டைரக்டு செய்துள்ளார். அம்பேத்குமார் தயாரித்துள்ளார்.

‘ஜிப்ஸி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.  விழாவில் நடிகர் ஜீவா கலந்துகொண்டு பேசியதாவது:-

“ஜிப்ஸி எனக்கு ஒரு பெரிய பயணம். இந்த படத்தில் நடித்தது மகிழ்ச்சி. ஜிப்ஸி ரசிகனை முன்மொழிபவன். இன்றைக்கு நாம் செல்போன், செய்தி சேனல்கள் போன்றவற்றை பார்க்காமல் இருந்தால் பிரச்சினைகள் இல்லாமல் இருப்பது போல இருக்கும். படத்தில் அந்த விஷயங்கள் உள்ளன.

இந்தப்படத்திற்காக நான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணித்து இருக்கிறேன். ராஜுமுருகன் எனக்கு நல்ல தீனி கொடுத்து இருக்கிறார். ஒரு நடிகன் நல்ல பெயர் வாங்குவதற்கும், உயர்வதற்கும் டைரக்டரின் எழுத்து தான் காரணம். ராஜு முருகன் எழுத்து உணர்வைச் சரியாக வெளிப்படுத்தும்.

ராம், கற்றது தமிழ் படங்கள் எப்படி உணர்வுகளை வெளிப்படுத்தியதோ ஜிப்ஸி அதைவிட உயர்வாக வெளிப்படுத்தும். ராஜு முருகன் ஒரு கம்யூனிஸ்டு. இந்தப்படத்தில் அனைவருமே உண்மையாக உழைத்திருக்கிறார்கள்.”

இவ்வாறு ஜீவா பேசினார்.

டைரக்டர்கள் கரு பழனியப்பன், சீனு ராமசாமி, கோபி நயினார், மாரி செல்வராஜ், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, எஸ்.ஆர்.பிரபு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்பட பலர் பேசினார்கள்.

Next Story