சினிமா செய்திகள்

‘அவெஞ்சர்ஸ்’ நடிகைக்கு 3-வது திருமணம் + "||" + 3rd marriage to 'Avengers' actress

‘அவெஞ்சர்ஸ்’ நடிகைக்கு 3-வது திருமணம்

‘அவெஞ்சர்ஸ்’ நடிகைக்கு 3-வது திருமணம்
அவெஞ்சர்ஸ் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த படங்கள் வசூல் சாதனைகளும் நிகழ்த்தின.
சமீபத்தில் இதன் கடைசி பாகமான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது. வசூலில் டைட்டானிக் படத்தின் சாதனையை முறியடித்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இதில் பிளாக் விடோ கதாபாத்திரத்தில் நடித்த ஸ்கெர்லெட் ஜொஹான்சன் ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார். அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் தமிழ் பதிப்பில் பிளாக் விடோவுக்கு நடிகை ஆண்ட்ரியா டப்பிங் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்கெர்லெட் ஜொஹான்சனுக்கு திருமணம் முடிவாகி உள்ளது.

தனது நீண்ட நாள் காதலரான காலின் ஜோஸ்ட் என்பவரை விரைவில் திருமணம் செய்து கொள்கிறார். இது அவருக்கு 3-வது திருமணம் ஆகும். ஏற்கனவே 2008-ல் ரியான் என்பவரை மணந்து 2011-ல் விவாகரத்து செய்து பிரிந்தார். அதன்பிறகு ரோமென் டாரிக் என்பவரை திருமணம் செய்து அவரையும் 2017-ல் விவாகரத்து செய்தார்.

ஸ்கெர்லெட் ஜொஹான்சனும் காலின் ஜோஸ்ட்டும் இப்போது ஜோடியாக சுற்றி வருகிறார்கள். பொது நிகழ்ச்சிகளிலும் ஜோடியாக பங்கேற்கிறார்கள். அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் சிறப்பு காட்சியிலும் ஒன்றாக கலந்து கொண்டனர். இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.