சினிமா செய்திகள்

விஜய்-அஜித் படங்கள் ஒரே நாளில் மோதலா? + "||" + Vijay-Ajith movies of conflict in one day?

விஜய்-அஜித் படங்கள் ஒரே நாளில் மோதலா?

விஜய்-அஜித் படங்கள் ஒரே நாளில் மோதலா?
விஜய், அஜித்குமார் படங்கள் திரைக்கு வருவதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம்.
இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானால் போட்டி போட்டு கட்-அவுட், பேனர் அமைத்தல், பட்டாசு வெடித்தல் என்று கொண்டாட்டங்களில் அனல் பறக்கும். ஏற்கனவே விஜய்யின் திருமலை, ஆஞ்சநேயா படங்களும் பிரண்ட்ஸ், தீனா படங்களும் ஒரே நாளில் வந்தன. 

கடைசியாக 2014 பொங்கல் பண்டிகையில் விஜய்யின் ஜில்லாவும் அஜித்குமாரின் வீரமும் ஒரே நாளில் மோதின. அதுபோல் அடுத்து அவர்கள் நடிக்க உள்ள படங்கள் ஒரே நாளில் திரைக்கு வர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் அவரது 63-வது படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ‘நேர் கொண்ட பார்வை’ படம் ஆகஸ்டு மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது. இது அஜித்துக்கு 59-வது படம். இந்த படங்களுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய்யும், அஜித்குமார் மீண்டும் வினோத் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளனர்.

இந்த 2 படங்களும் அடுத்த வருடம் கோடையில் ஒரே நாளில் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.