சினிமா செய்திகள்

பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சிக்கு மாறிய காஜல் அகர்வால் + "||" + Kajal Agarwal who turned to glamor for film opportunities

பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சிக்கு மாறிய காஜல் அகர்வால்

பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சிக்கு மாறிய காஜல் அகர்வால்
விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி உள்பட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து பிரபல நடிகையாக இருந்தவர் காஜல் அகர்வால்.
தெலுங்கு பட உலகிலும் அதிக படங்களில் நடித்தார். ஆனால் சமீப காலமாக அவருக்கு படவாய்ப்புகள் குறைந்துவிட்டன. இந்தியில் வெற்றி பெற்ற குயின் படத்தின் தமிழ் பதிப்பான பாரிஸ் பாரிஸ் படத்தை மட்டும் நம்பி உள்ளார்.

இந்த படமும் பல மாதங்களாக திரைக்கு வராமல் முடங்கி உள்ளது. கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்-2 படத்தில் ஒப்பந்தம் செய்தனர். ஆனால் அதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போய்விட்டார். படத்தை கைவிட்டு விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிவருகிறது.

இதனால் புதிய படங்கள் இல்லாமல் வேதனையில் இருக்கும் காஜல் பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக கவர்ச்சிக்கு மாறி இருக்கிறார். அரைகுறை ஆடை அணிந்து புகைப்படம் எடுத்து அவற்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதன் மூலம் எவ்வளவு கவர்ச்சிக்கும் இறங்க தயார் என்று இயக்குனர்களுக்கு தெரிவித்து உள்ளார்.

குடும்ப பாங்காக வந்த காஜல் அகர்வாலை கவர்ச்சி உடையில் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர். இந்தி படங்களில் பட வாய்ப்புகளை பிடிக்க நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதை காஜலும் இப்போது பின்பற்ற தொடங்கி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. “அரசியலுக்கு வர திட்டமா?” காஜல் அகர்வால் விளக்கம்
காஜல் அகர்வால் தமிழில் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’, ‘கோமாளி’ படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. அடுத்து கமல்ஹாசன் ஜோடியாக, ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து வருகிறார்.
2. ‘‘50 படங்களில் நடித்தது பெருமை’’ - காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்கு பாரிஸ் பாரிஸ், கோமாளி ஆகிய 2 தமிழ் படங்கள் கைவசம் உள்ளன. கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்–2 படத்திலும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
3. நயன்தாரா சாதனையை முறியடித்த காஜல் அகர்வால்!
கங்கனா ரணாவத் நடித்த ‘குயீன்’ என்ற இந்தி படம், வட மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை படைத்தது.
4. ஆபாசமாக நடிப்பதா? காஜல் அகர்வாலுக்கு எதிர்ப்பு
இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து வெற்றிகரமாக ஓடிய குயின் படம் தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. இதில் காஜல் அகர்வால் நடித்துள்ளார்.
5. ‘‘பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ - காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் நடித்துள்ள பாரிஸ் பாரிஸ் படம் விரைவில் திரைக்கு வருகிறது. அடுத்து கமல்ஹாசனுடன் இந்தியன்–2 படத்திலும் நடிக்கிறார். இந்த மகிழ்ச்சியில் இருக்கும் அவர் அளித்த பேட்டி வருமாறு:–

ஆசிரியரின் தேர்வுகள்...