மோகன்லால் படம் ரூ.200 கோடி வசூல்


மோகன்லால் படம் ரூ.200 கோடி வசூல்
x
தினத்தந்தி 23 May 2019 12:15 AM GMT (Updated: 22 May 2019 9:09 PM GMT)

தமிழ், இந்தி, தெலுங்கு படங்களைபோல் மலையாள படங்களுக்கு உலக அளவில் பெரிய மார்க்கெட் இல்லை. குறைந்த அளவே வசூல் ஈட்டி வந்தன. ஆனாலும் சிறந்த கதைகளை அங்கு உருவாக்குகிறார்கள்.

மணிசித்திரத்தாழ் மலையாள படம் ரஜினிகாந்த் நடிக்க சந்திரமுகி என்ற பெயரிலும், அனியத்தி ப்ராவு, பாடிகார்ட் படங்கள் விஜய் நடிக்க காதலுக்கு மரியாதை, காவலன் பெயர்களிலும் தமிழில் வந்தன.

‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ தமிழில் ஜோதிகா நடித்து ‘36 வயதினிலே’ என்ற பெயரில் வெளியானது. இந்த நிலையில் மோகன்லால் நடித்த புலிமுருகன் முதல் தடவையாக ரூ.100 கோடி வசூல் ஈட்டியது. அதன்பிறகு நிவின்பாலி கதாநாயகனாக நடித்த காயங்குளம் கொச்சுண்ணி படமும் ரூ.100 கோடி வசூலை தொட்டது.

தற்போது பிருதிவிராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சுவாரியர் நடித்து கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்த ‘லூசிபர்’ படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம் என்ற பெருமையும் இந்த படத்துக்கு கிடைத்துள்ளது. “இந்த பெரிய மைல்கல்லை எட்டுவதற்கு உதவிய உலக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று டுவிட்டரில் மோகன்லால் கூறியுள்ளார்.

Next Story