சினிமா செய்திகள்

மீண்டும் நடிக்கும் சினேகா + "||" + Again, starring Sneha

மீண்டும் நடிக்கும் சினேகா

மீண்டும் நடிக்கும் சினேகா
தமிழ் பட உலகில் 2000–ல் ‘என்னவளே’ படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் சினேகா.
ஆனந்தம், பம்மல் கே.சம்பந்தம், உன்னை நினைத்து, பார்த்திபன் கனவு, ஜனா, ஆட்டோகிராப், பிரிவோம் சந்திப்போம், பவானி ஐ.பி.எஸ், பொன்னர் சங்கர், புதுப்பேட்டை, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். 

கடைசியாக வேலைக்காரன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தலைகாட்டினார். சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் 2012–ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த சினேகா மீண்டும் நடிக்க வந்துள்ளார். 

மகாபாரத கதையை மையமாக வைத்து தயாராகும் குருஷேத்திரா என்ற புராண படத்தில் திரவுபதி வேடத்தில் நடிக்கிறார். இதில் கர்ணனாக அர்ஜுன், துரியோதனனாக தர்‌ஷன், பீஷ்மராக அம்பரீஷ், அர்ஜுனனான சோனுசூட் நடித்துள்ளனர். ஹரி பிரியா, பாரதி விஷ்ணுவர்த்தன், மேக்னா ராஜ், ரம்யா நம்பீசன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். 

இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதில் வந்த சினேகாவின் திரவுபதி தோற்றத்தை பலர் பாராட்டுகிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு சினேகா நடிப்பதால் குருஷேத்திரா படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளிலும் வெளியாக உள்ளது.