சினிமா செய்திகள்

‘‘50 படங்களில் நடித்தது பெருமை’’ - காஜல் அகர்வால் + "||" + It is proud to act in 50 films - Kajal Agarwal

‘‘50 படங்களில் நடித்தது பெருமை’’ - காஜல் அகர்வால்

‘‘50  படங்களில்  நடித்தது  பெருமை’’ - காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்கு பாரிஸ் பாரிஸ், கோமாளி ஆகிய 2 தமிழ் படங்கள் கைவசம் உள்ளன. கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்–2 படத்திலும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:–  தமிழ், தெலுங்கு, இந்தி என்று எல்லா மொழிகளிலும் நடித்து விட்டேன். ஐம்பது படங்களை தாண்டிவிட்டது பெருமையாக உள்ளது.

என்னை வளர்த்த தமிழ், தெலுங்கு பட உலகை சமமாகவே பார்க்கிறேன். ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும். நடிகையாக இன்னும் எப்படி மெருகேற்றுவது என்றுதான் யோசிப்பேன். ரசிகர்கள் பாராட்டுவதே முக்கியம். அதற்காக இன்னும் உழைக்க தயாராக இருக்கிறேன்.

கமல்ஹாசனுடன் இந்தியன்–2 படத்தில் நடிப்பது பெருமையான வி‌ஷயம். மனதில் திடமாக நினைத்தால் எதுவாக இருந்தாலும் நடந்துவிடும். 

உழைக்கிற குணமும், பொறுமையும் இருந்தால் நாம் நினைத்த எல்லாவற்றையும் சாதிக்க முடியும். சினிமா துறையில் திருப்தி என்பது யாருக்கும் இருக்காது.

புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஏக்கம் இருக்கும். நான் நினைத்த மாதிரி எதிர்பாக்கிற மாதிரி வாய்ப்புகள் வராது. ஆனாலும் பொறுமையாக இருக்க வேண்டும். வாய்ப்பு வரும்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை எதிர்பார்க்கிறேன். தாமதமானாலும் அதுமாதிரி படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன். சினிமாவில் நீடித்து இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.’’

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. “அரசியலுக்கு வர திட்டமா?” காஜல் அகர்வால் விளக்கம்
காஜல் அகர்வால் தமிழில் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’, ‘கோமாளி’ படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. அடுத்து கமல்ஹாசன் ஜோடியாக, ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து வருகிறார்.
2. பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சிக்கு மாறிய காஜல் அகர்வால்
விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி உள்பட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து பிரபல நடிகையாக இருந்தவர் காஜல் அகர்வால்.
3. நயன்தாரா சாதனையை முறியடித்த காஜல் அகர்வால்!
கங்கனா ரணாவத் நடித்த ‘குயீன்’ என்ற இந்தி படம், வட மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை படைத்தது.
4. ஆபாசமாக நடிப்பதா? காஜல் அகர்வாலுக்கு எதிர்ப்பு
இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து வெற்றிகரமாக ஓடிய குயின் படம் தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. இதில் காஜல் அகர்வால் நடித்துள்ளார்.
5. ‘‘பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ - காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் நடித்துள்ள பாரிஸ் பாரிஸ் படம் விரைவில் திரைக்கு வருகிறது. அடுத்து கமல்ஹாசனுடன் இந்தியன்–2 படத்திலும் நடிக்கிறார். இந்த மகிழ்ச்சியில் இருக்கும் அவர் அளித்த பேட்டி வருமாறு:–