சினிமா செய்திகள்

ஆண்களிடம் எதிர்பார்ப்பது அதிக வசீகரம் + "||" + Expect to men More charm

ஆண்களிடம் எதிர்பார்ப்பது அதிக வசீகரம்

ஆண்களிடம் எதிர்பார்ப்பது அதிக வசீகரம்
இந்தி திரை உலகில் அறிமுகமாகியிருக்கும் கவர்ச்சிக் கன்னிகளில் குறிப்பிடத்தக்கவர் நோரா பதேஹி.
ந்தி திரை உலகில் அறிமுகமாகியிருக்கும் கவர்ச்சிக் கன்னிகளில் குறிப்பிடத்தக்கவர் நோரா பதேஹி. கட்டுக்கோப்பான உடல்வாகுவை பெற்றிருப்பதாலும், இளமைத்துள்ளல் இவரிடம் மிக அதிகமாக இருப்பதாலும், இளம் நடிகர்கள் இவரோடு ஜோடி சேர அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இவர் முறைப்படி நடனம் கற்றிருப்பதால் இவரது உடல்மொழியும் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் இருக்கிறது.

சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நோராவுடன் விறுவிறுப்பான ஒரு பேட்டி:

திரையுலகின் நல்ல விஷயம் என்ன? மோசமான விஷயம் என்ன?

திரை உலகில் என்னைப்போன்றவர்கள் தங்கள் திறமையை பலவிதங்களில் வெளிப் படுத்திக்கொள்ள முடியும். மோசமான விஷயம், இங்கே நாம் தடம் பதிப்பதற்கு நிறையப் போராட வேண்டும்.

ஸ்டைலில் நீங்கள் வியக்கும் நடிகை?

சோனம் கபூர்.

நீங்கள் சிறுவயதில், எந்த நடிகரைப் பார்த்து காதலிக்கவேண்டும் என்று விரும்பினீர்கள்?

ஹிருத்திக் ரோஷனை பார்த்து நான் காதலிக்கத் தூண்டப்பட்டேன். அவர் கிரேக்க கடவுள் போன்ற தோற்றம் கொண்டவர். என்னைப் போன்ற பலரும் அந்த பருவத்தில் அவருக்கு ரசிகையாக இருந்திருப்பார்கள்.

இந்தியில் எந்த குத்தாட்டப் பாடலுக்கு நாம் ஆடியிருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?

2017-ம் ஆண்டு வெளியான ரேஸ் படத்தில் இடம்பெற்ற ‘லைலா மே லைலா’ பாடலுக்கு நான் ஆடியிருந்தால் பிரமாதப்படுத்தியிருக்கலாம் என்று நினைத்ததுண்டு.

எந்த நடனம் மிகவும் கவர்ச்சியானது என்று நினைக்கிறீர்கள்?

பெல்லி டான்ஸ். அதை நானும் ஆடுவேன்.

நீங்கள் ஆணிடம் எதிர்பார்க்கும் 3 முக்கியமான விஷயங்கள்?

வசீகரம், கடின உழைப்பு, மரியாதை உணர்வு.

எது உங்கள் காதல் உணர்வைத் தூண்டும்?

அமைதி தவழும் இடம்.

நட்பு விஷயத்தில் நீங்கள் எப்போதும் பின்பற்றும் விதி?

என்னுடன் நட்பில் இருக்கிற ஆண், மரியாதை தராவிட்டாலோ, அதற்காக முயற்சி செய்யாவிட்டாலோ அவரை நான் புறக் கணித்து விடுவேன்.

உங்களுக்குப் பிடித்த நகரம்?

துபாய்.

பிடித்த படம்?

‘தி ஹீட்’ (2013)

உங்கள் மன அழுத்தத்தைப் போக்கும் விஷயம்?

நடனம்.

பிடித்த சுற்றுலாத் தலம்?

மொராக்கோ.

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் நீங்கள் செய்யும் முதல் காரியம்?

எனது செல்போனை எடுத்துப் பார்ப்பது.

இரவு தூங்கும் முன் செய்வது?

பிரார்த்தனை.