சினிமா செய்திகள்

திருமணத்தை வெறுக்கும் சார்மி + "||" + Hate marriage Charmi

திருமணத்தை வெறுக்கும் சார்மி

திருமணத்தை வெறுக்கும் சார்மி
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த சார்மி. இப்போது பட தயாரிப்பில் இறங்கி இருக்கிறார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த சார்மி. இப்போது பட தயாரிப்பில் இறங்கி இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“நான் பெரிய கதாநாயகர்களுடன் நடித்து இருக்கிறேன். 15 ஆண்டுகள் தொடர்ந்து நடித்த எனக்கு சலிப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் நடிப்பதில் இருந்து விலகி பட தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளேன். ஜோதி லட்சுமி படத்தில் நடித்தபோதே இந்த முடிவை எடுத்து விட்டேன்.


ஜோதி லட்சுமி படத்துக்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் ஒரு முடிவுக்கு வந்தால் அதை மாற்றிக்கொள்ள மாட்டேன். தயாரிப்பாளராக எனது பயணம் மிகவும் பிடித்துள்ளது. இனிமேல் நடிக்க மாட்டேன். மீண்டும் நடிக்க விரும்பினால் அதுகுறித்து பிறகு முடிவு எடுப்பேன். இப்போது தயாரிப்புதான் முக்கியம். நடிப்பை தள்ளி வைத்து இருக்கிறேன்.

பெண் தயாரிப்பாளரான எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆண் மாதிரி யோசிப்பேன். வேலையும் செய்வேன். ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் படப்பிடிப்பில் இருப்போம். தயாரிப்பாளராக இருப்பது சவாலானது. கதாநாயகியாக நடித்து விட்டுப்போய் விடலாம். தயாரிப்பு தொழில் அப்படி இல்லை. மன அழுத்தம், தூக்கம் இல்லாமை ஆகிய கஷ்டங்கள் இருக்கும். என் திருமணம் பற்றி கேட்கிறார்கள். திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை. நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.” இவ்வாறு சார்மி கூறினார்.