தேர்தல் முடிவு பற்றி சர்ச்சை படத்தை வெளியிட்ட நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிர்ப்பு


தேர்தல் முடிவு பற்றி சர்ச்சை படத்தை வெளியிட்ட நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 26 May 2019 11:51 PM GMT (Updated: 26 May 2019 11:51 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கிறது. வட மாநிலங்களில் அதிக தொகுதிகளை அந்த கட்சி கைப்பற்றி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கிறது. வட மாநிலங்களில் அதிக தொகுதிகளை அந்த கட்சி கைப்பற்றி உள்ளது. ஆனால் தமிழ் நாட்டில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. 37 தொகுதிகளில் தி.மு.க கூட்டணியும் ஒரு தொகுதியில் அ.தி.மு.க.வும் வென்றுள்ளது.

இதனால் பா.ஜனதா கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர். தமிழகம் பெரியார் மண் என்றும் இங்கு தாமரை ஒருபோதும் மலராது என்றும் தி.மு.க கூட்டணி தலைவர்கள் பேசி வருகிறார்கள். ஆனால் பா.ஜனதா கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் தங்களை தோற்கடித்ததன் மூலம் தமிழ்நாட்டுக்கு மத்திய மந்திரி சபையில் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்து விட்டனர் என்றும், தமிழகத்துக்கு மத்திய அரசின் திட்டங்களை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படும் என்றும் விமர்சித்து வருகிறார்கள்.

மக்கள் சரியாகவே வாக்களித்தனர் என்று அவர்களுக்கு சமூக வலைத்தளத்தில் பலர் பதிலடி கொடுத்து வருகிறார்கள். வலைத்தளத்தில் இது கடுமையான விவாதமாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒருவர் தனது தலையில் மண்ணை அள்ளிக்கொட்டும் புகைப்படத்தை வெளியிட்டு, ‘ஓ இதுதான் தமிழ் மண்ணா’ என்று பதிவிட்டு தேர்தல் முடிவை கேலி செய்து இருந்தார்.

இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பா.ஜனதா தலையில்தான் மக்கள் மண்ணை கொட்டி உள்ளனர் என்று கூறி எஸ்.வி.சேகர் புகைப்படம் வெளியிட்டதை பலரும் கண்டித்து வருகிறார்கள்.

Next Story