சினிமா செய்திகள்

மீண்டும் காதலில் விழுந்த திரிஷா? + "||" + Trisha fell in love again

மீண்டும் காதலில் விழுந்த திரிஷா?

மீண்டும் காதலில் விழுந்த திரிஷா?
திரிஷாவுக்கு 36 வயது ஆகிறது. அவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் அவசரம் காட்டுகின்றனர். ஆனாலும் தொடர்ந்து படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார்.
சில வருடங்களுக்கு முன்பு திரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்று வந்தார்கள்.

இதனால் அவர்களை இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. அதனை இருவரும் மறுத்தார்கள். அதன்பிறகு பட அதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் வரை சென்று ரத்தாகிவிட்டது. இந்த நிலையில் தனது வலைத்தள பக்கத்தில் ரசிகர்களுடன் திரிஷா கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் நீங்கள் காதலிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.


அதற்கு பதில் அளித்த திரிஷா, “நான் தனியாகத்தான் இருக்கிறேன். ஆனாலும் வருங்கால கணவர் முடிவாகிவிட்டது” என்றார். இதன்மூலம் அவர் காதலில் விழுந்து இருப்பது உறுதியாகி உள்ளது. யாரை காதலிக்கிறார் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை. திரிஷா 2002-ல் இருந்து கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்துவிட்டார்.

ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்ற அவரது ஆர்வம் ‘பேட்ட’ படத்தில் நிறைவேறியது. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் கவனம் செலுத்துகிறார். கர்ஜனை, சதுரங்க வேட்டை படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது பரமபதம், ராங்கி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.