சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் படத்தில் அனுஷ்கா? + "||" + Ponniyin Selvan Anushka in the film

பொன்னியின் செல்வன் படத்தில் அனுஷ்கா?

பொன்னியின் செல்வன் படத்தில் அனுஷ்கா?
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார்.
60-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை கொண்ட இந்த நாவலில் ராஜராஜ சோழன் மற்றும் தந்தையார் சுந்தர சோழன், அண்ணன் ஆதித்த கரிகாலன், அக்கா குந்தவை, குந்தவையின் காதல் கணவன் வந்தியத் தேவன், ராஜராஜ சோழனின் மனைவி வானதி, குறுநில மன்னர்களில் ஒருவரான பழுவேட்டரையர், வீரபாண்டியன், ஈழத்து அழகி பூங்குழலி, தந்திரம் மிக்க ஆழ்வார்கடியான், வீரபாண்டியனுக்காக சோழ சாம்ராஜ்யத்தை ஆட்டுவித்த நந்தினி உள்பட 10 கதாபாத்திரங்கள் முக்கியமானவை.


இதில் வந்தியத்தேவனாக கார்த்தி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் தேர்வாகி உள்ளார். ஜெயம்ரவியும் நடிக்கிறார்.

தற்போது அனுஷ்காவும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் இதுகுறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அனுஷ்கா சமீபத்தில் வெளிநாடு சென்று உடல் எடையை சிகிச்சை மூலம் குறைத்து வந்துள்ளார். மாதவனுடன் ‘சைலன்ஸ்’ படத்திலும் நடித்து வருகிறார்.

பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக தயாராகிறது. இதன் படப்பிடிப்பு இந்த வருடம் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.800 கோடி செலவில் தயாராகும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் புதிய மாற்றம்
அரச குலத்தில் நடந்த நிகழ்வுகளை வரலாற்று ஆதாரங்களோடு கற்பனையையும் சேர்த்து கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் இறங்கி உள்ளார்.
2. வந்தியதேவன், குந்தவையாக நடிக்கின்றனர் பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி, கீர்த்தி சுரேஷ்
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க பல காலகட்டங்களில் முயற்சிகள் நடந்தன. எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் ஆகியோருக்கும் இதை படமாக்கும் ஆசை இருந்தது. தொடர்ந்து இயக்குனர் மணிரத்னமும் இந்த முயற்சியில் ஈடுபட்டார்.
3. ஜோடியாக திரிகின்றனர்: உறுதியான பிரபாஸ்-அனுஷ்கா காதல்?
ஜோடியாக சுற்றி வருவதால், பிரபாஸ்-அனுஷ்கா காதல் உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.