சினிமா செய்திகள்

“கதாநாயகிகள் மார்க்கெட் கொஞ்ச காலம்தான்” -நடிகை ரகுல்பிரீத் சிங் + "||" + The heroines market is a short time Actress Rakul Preet Singh

“கதாநாயகிகள் மார்க்கெட் கொஞ்ச காலம்தான்” -நடிகை ரகுல்பிரீத் சிங்

“கதாநாயகிகள் மார்க்கெட் கொஞ்ச காலம்தான்” -நடிகை ரகுல்பிரீத் சிங்
தென்னிந்திய மொழி படங்களில் வெற்றிபெற்ற நடிகைகள் பட்டியலில் எனது பெயர் இருக்கிறது. இப்போது இந்தியிலும் வாய்ப்புகள் வருகின்றன.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் ரகுல்பிரீத் சிங். இந்தி படத்திலும் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“ஒவ்வொரு படத்திலும் புதிய விஷயங்களையும் வித்தைகளையும் கற்றுக்கொள்கிறேன். கதையோடு ஒட்ட வேண்டும் என்பதற்காக நிறைய பயிற்சிகள் எடுத்து நடிக்கிறேன். தென்னிந்திய மொழி படங்களில் வெற்றிபெற்ற நடிகைகள் பட்டியலில் எனது பெயர் இருக்கிறது. இப்போது இந்தியிலும் வாய்ப்புகள் வருகின்றன.


எனக்கு மொழிகள் பற்றி கவலை இல்லை. எந்த மொழியில் இருந்து நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வந்தாலும் நடிப்பேன். வேலை என்று வந்தால் எனது எண்ணங்கள் வேறு மாதிரி இருக்கும். ஒரு வருடத்துக்கு நாலைந்து படங்களில் நடிக்கிறேன். எப்போதும் ஓய்வில்லாமல் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

வருகிற படங்களில் எல்லாம் நடிக்க வேண்டும் என்று ஒப்புக்கொள்கிறேன்.

காரணம் கதாநாயகிகள் மார்க்கெட் என்பது கொஞ்ச காலம்தான் இருக்கும். அதனால்தான் அனைத்து படங்களையும் ஒப்புக்கொள்கிறேன். ஓய்வில்லாமல் வேலை செய்து கொண்டு இருந்தால் அதில் மேலும் உற்சாகம் வரும்.

படம் நடிப்பதோடு சரி. அதன்பிறகு அது வெற்றி அடைந்ததா? தோல்வி ஆனதா? என்று கண்டுகொள்ள மாட்டேன். படம் தோல்வி அடைந்தால் இனிமையான வேறு நினைவுகளில் கவனம் செலுத்தி அதை மறப்பேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.